மாநில சட்டமன்றத்தை அவமானம் செய்த எச்.ராஜா.!! லயன்ஸ் கிளப், ரோட்டரிகிளப்புகளுடன் ஒப்பிட்டு ஆட்ராசிட்டி பேச்சு..

By Ezhilarasan BabuFirst Published Feb 17, 2020, 12:42 PM IST
Highlights

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திலும் குடியுரிமையை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் .
 

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றும் தீர்மானங்கள் சாதாரண லயன்ஸ் கிளப் , ரோட்டரி கிளப்புகளில் கொண்டு வரும் தீர்மானங்களுக்கு சமம் என பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான எச். ராஜா கிண்டலடித்துள்ளார் .  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின்  சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் . 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ,  தேசிய குடிமக்கள் பதிவேடு ,  மக்கள் தொகை கணக்கெடுப்பு ,  உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது .  இஸ்லாமியர்களை குறிவைத்து இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது ஆகவே  இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் என  போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.   குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இச்சட்டங்களை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது .  மேற்கு வங்கம் ,  கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் இச்சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில் தமிழக சட்டமன்றத்திலும் குடியுரிமையை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர் . 

இந்நிலையில் இதுகுறித்து சென்னையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ,  குடியுரிமை திருத்த சட்டம் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவால்  நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமாகும்,  இந்நிலையில்  இச் சட்டங்களை எதிர்த்து  மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சாதாரண ஒரு லயன்ஸ் கிளப் ,  ரோட்டரி கிளப்புகளில் நிறைவேற்றப்படும்  தீர்மானங்களுக்கு சமமானது.  அவைகளுக்கு  எந்த அதிகாரமும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார் .  மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்து விட்டாள் மாநில அரசுகள் அதில் அதிகாரம் செலுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

click me!