மத்தியில் ஹீரோ... தமிழகத்தில் ஜீரோ... மோடிக்கு பறந்த ஷாக் ரிப்போர்ட்..!

By Thiraviaraj RMFirst Published Apr 28, 2021, 3:58 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டம்ன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் ஒரு தொகுதியை கூட பாஜக கைப்பற்ற வாய்ப்பில்லை என்கிற தகவல் டெல்லி தலைமைக்கு எட்டியுள்ளது. 
 

தமிழகத்தில் சட்டம்ன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் ஒரு தொகுதியை கூட பாஜக கைப்பற்ற வாய்ப்பில்லை என்கிற தகவல் டெல்லி தலைமைக்கு எட்டியுள்ளது. 

தமிழகத்தில் தத்தித் தாவியாவது தாமரையை மலர வைக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது பாஜக. தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்து ஆளும் அதிமுக கட்சியுடன் கூட்டணியுடன் கை கோர்த்து களமிறங்கி இருக்கிறது பாஜக. அதன்படி 20 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்களை களமிறக்கிய பாஜக, ஒரு வேட்பாளரையாவது வெற்றிபெற வைத்து தமிழக சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து தனது இருப்பைக் காட்ட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறது. 
 
அதற்காக பாஜக வேட்பாளர்களும் உற்சாகத்துடன் களமிறங்கி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரச்சாரம் சூடு பிடித்தபோது, பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் அக்கட்சிக்கான வரவேற்பு குறித்து மத்திய உளவுத்துறையிடம் விசாரித்துள்ளது. உளவுத்துறையும் அதே வாரத்தில் 2 முறை அடுத்தடுத்து 20 தொகுதிகளின் நிலவரத்தையும் அலசி ஆராய்ந்து டெல்லி மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த ரிப்போர்ட்டில் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு கூட வெற்றி முகம் இல்லை என்று கூறியிருக்கிறது. 

இதனால் பதற்றமடைந்த பாஜக மேலிடம், ஏன் தமிழகத்தில் மட்டும் பாஜகவுக்கு இந்த நிலை என தீவிரமாக ஆலோசித்துள்ளதாம். இதைத்தொடர்ந்து தமிழகம் செல்லும் போது இதுபற்றி விவாதிக்கலாம் என மேலிடம் தீர்மானித்தது. அதன்படி பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு வந்தபோது, இதுபற்றி விசாரித்துள்ளார். அதுதொடர்பாக பின் டெல்லி சென்றும் மோடி விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனைக்கு பின்னரே தமிழகத்தில் 10 தொகுதியிலேயாவது மலர்ந்தே தீர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பு, பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டியிடும் அந்த 5 நட்சத்திர தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் வடமாநில தலைவர்கள் களமிறக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களின் வருகைக்கு பின் பாஜக மட்டுமல்ல. அதிமுகவின் வாக்கு வங்கியிலும் சரிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவினர் சிலரும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், பாஜகவின் அதற்கு பிந்தைய நிலவரம் குறித்து டெல்லி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், 20 தொகுதிகளுக்கும் பாஜகவுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அதிமுக ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளை நாம் பிடிவாதமாக வாங்கியது தான் என்று கூறப்பட்டிருக்கிறது.

நமது இந்த செயலால் கடும் அதிருப்திக்குள்ளாகிய அதிமுக நிர்வாகிகள், களத்தில் இறங்கி வேலை செய்யவில்லை என அந்த ரிப்போர்டில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனாலேயே கூட்டணி ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு, பாஜகவுக்கு எதிரானவர்கள் மறைமுகமாகவே உள்ளடி வேலைகளை பார்த்து, எதிர்கட்சியினர் வெற்றிப்பெறுவது போன்ற சில காரியங்களை செய்ததாகவும் அதனாலேயே 20 தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஸ்திரமற்ற நிலை என்றும் ரிப்போர்டில் விளக்கப்பட்டுள்ளது.

இதனால் கொதித்து போயுள்ள பாஜகவின் முக்கிய தலைகள், உள்ளடி வேலை பார்த்தவர்களின் பட்டியலை ரெடி பண்ண உத்தரவிட்டுள்ளதாம். ரிசல்ட் வந்ததும், அவர்களுக்கு ஆப்பு ரெடியாக காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சென்றமுறை எம்.பி தேர்தலிலும் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறாததற்கு அதிமுக கூட்டணியின் ஒத்துழைப்பு இன்மை தான் காரணம் என்று சொல்லப்பட்டுள்ளது.
 

click me!