புனித மெக்காவில் தலைமை இமாம் இந்தியாவுக்காக கண்ணீர் பிரார்த்தனை..?? காண்போரை உருகவைக்கும் வீடியோ வைரல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2021, 3:17 PM IST
Highlights

புனித மெக்காவில் தலைமை இமாம் கொரோனாவால் சிக்கி திணறும் இந்தியாவுக்காக கண்ணீர் பிரார்த்தனை செய்துள்ளார். அதற்கான விடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.  

புனித மெக்காவில் தலைமை இமாம் கொரோனாவால் சிக்கி திணறும் இந்தியாவுக்காக கண்ணீர் பிரார்த்தனை செய்துள்ளார். அதற்கான விடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது. 

இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிகக் கடுமையாக பாதித்து வருகிறது. உலகிலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதித்த நடக்க இந்தியா மாறியுள்ளது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, அதனால் மருத்துவமனைகளின் நேர்ந்த விபத்துக்கள்  என இந்திய மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் கொடூரம் ஆன்றாடம் அரங்கேறி வருகிறது. 

எனவே, சர்வதேச அளவில் பரிதாபத்துக்குரிய நாடாக இந்தியா தள்ளப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையில் பல நாடுகளுக்கு உதவிய இந்தியா, தற்போது பல நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன, குறிப்பாக பல நாடுகள்  இந்தியாவுக்காக பிரார்த்திப்போம் என்றும் கரிசனத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தீவிர கொரோனா புயல் வீசுவது உலகை கவலை கொள்ள செய்துள்ளது.உலகின் பெரிய மசூதியான சவூதியில் உள்ள புனித மெக்காவில் ரமலான் இரவு சிறப்பு தொழுகை தினமும் சமூக இடைவெளியுடன் நடை பெற்று வருகிறது. 

அதில் கொரோனாவால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியர்கள் நலன் பெற வேண்டி மெக்காவின் தலைமை இமாம் (மத குரு ) அப்துல் ரஹ்மான் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தது அனைவர் நெஞ்சையும் உருக வைத்துள்ளது. அரபியர்கள் இந்தியாவை 'ஹிந்த் ' என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறே அவர் பிரார்த்தனையில் கூறுவது தெரிகிறது. அரபியர்கள் இந்தியாவை தங்கள் வரலாற்று நண்பராக கொண்டாடுவது முக்கியமான செய்தியாகும். அவர் உருகி இந்தியாவுக்காக பிராத்திப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

 

click me!