தபால் வாக்குகளை முதலில் எண்ணுங்கள்.. ஓயாத திமுக. திணறும் தேர்தல் ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2021, 2:26 PM IST
Highlights

தபால் வாக்குகள் எண்ணிக்கை குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். 
 
அந்த கடிதத்தை திமுக சார்பில் பச்சையப்பன் நேரில் வழங்கினார், அதில் தபால் வாக்குகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால் அதற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

எப்போதுமிருக்கும் தேர்தல் நடத்தை முறைகளின்படி முதலில் தபால் வாக்குகள் தான் எண்ணப்பட வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் குறித்து எந்த ஒரு தன்னிச்சையான முடிவையும் தேர்தல் நடத்தும் அலுவலர் எடுக்கக் கூடாது என்றும், ஒரு மேஜைக்கு 500 தபால் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டும் என்றும் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

click me!