மருத்துவமனைகளில் படுக்கைகள்,மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட எதுவுமே இல்லை. எச்சரிக்கும் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2021, 2:07 PM IST
Highlights

மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட எதுவுமே இல்லை. முதல் அலை பரவும் போது அதை தடுக்க மத்திய மாநில அரசு தவற விட்டு விட்டது, முதல் தவறை திருத்திக்கொண்டு  இரண்டாவது தவறை செய்யாமல் எச்சரிக்கையுடன் இருந்திருக்கவேண்டும்,

திமுக தலைவர் ஸ்டாலினின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு தங்களையும் தங்களை சுற்றியுள்ளவர்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்கள் மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். 

அவசியமான இடங்களுக்கு மட்டும் பொதுமக்கள் செல்ல வேண்டும், அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். மருத்துவர்களிடம் மிகத் தீவிரமான ஆலோசனை மேற்கொண்ட பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள், உள்ளிட்ட சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். தமக்கு கொரோனா வராது என்று அலட்சியமாக யாரும் இருக்கக்கூடாது. நாளுக்கு நாள் நோய் பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருவது அது வருத்தம் அளிக்கிறது.

மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட எதுவுமே இல்லை. முதல் அலை பரவும் போது அதை தடுக்க மத்திய மாநில அரசு தவற விட்டு விட்டது, முதல் தவறை திருத்திக்கொண்டு இரண்டாவது தவறை செய்யாமல் எச்சரிக்கையுடன் இருந்திருக்கவேண்டும், அதையும் தவற விட்டு விட்டது. நோய்தொற்று நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் மத்திய மாநில அரசு தற்போது இரண்டாவது தவறு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!