தமிழக காவல்துறை மீது அந்திராவில் வெடிகுண்டு வீச்சு.. போலீஸார் படுகாயம்.. வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது.

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2021, 1:23 PM IST
Highlights

ஆந்திர மாநிலம் தடா பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சென்னை காவல்துறையினர் காயமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவரை ஆந்திர காவல்துறையினரும், ஒருவரை ஸ்ரீபெரும்புதூர் தனிப்படையினரும் வெவ்வேறு வழக்குகளுக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

ஆந்திர மாநிலம் தடா பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சென்னை காவல்துறையினர் காயமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் இருவரை ஆந்திர காவல்துறையினரும், ஒருவரை ஸ்ரீபெரும்புதூர் தனிப்படையினரும் வெவ்வேறு வழக்குகளுக்காக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

சென்னையில் அதிக அளவில் கல்லூரி மாணவர்களை வைத்து கஞ்சா விற்ற வழக்கில் முக்கிய குற்றாவாளியான ஹரியை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் ஹரி ஆந்திர மாநிலம் தடாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரவாயில் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் நேற்று அதிகாலை அங்கு சென்ற 6 பேர் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகள் பதுங்கியிரிந்த வீட்டை சுற்றிவளைத்து உள்ளே நுழைந்தனர். 

அப்போது குற்றவாளி ஹரி அங்கு இல்லாத நிலையில் அங்கிருந்த 10 பேரை சோதனை மேற்கொண்டு 2 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அப்போது ஆயுதங்களுடன் இருந்த நாட்டு வெடுகுண்டு எதிர்பாராத விதமாக வெடித்ததில் இரு காவல்துறையினர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறையினரால் டெல்லி, முரளி மற்றும் நரேஷ் குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். காயமடைந்த காவல்துறையினர் மதுரவாயில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட டெல்லி மற்றும் முரளி ஆகிய இருவர் மீது ஆந்திர மாநிலம் தடா காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வழக்கு தொடர்பாக நேற்று மதுரவாயில் காவல் நிலையம் வந்த ஆந்திர காவல்துறையினர் டெல்லி மற்றும் முரளி ஆகிய இருவரையும் கைது செய்து தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். டெல்லி மற்றும் முரளி மீது ஆந்திர மாநிலம் தடாவில் கொலை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல மற்றொரு குற்றவாளியான நரேஷ் குமார் ஸ்ரீபெரும்புதூரில் 300 சவரன் நகை வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் தனிப்படையினர் மூலம் நரேஷ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். 13 பேர் தொடர்புடைய இந்த 300 சவரன் நகை வழிப்பறி வழக்கில் 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நரேஷை 11 வது நபராக ஸ்ரீபெரும்புதூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!