டெல்லி மருத்துவமனைகளின் சுயநலம்.. அரசின் மீது பழிபோடும் அயோக்கியத்தனம். பகிரங்கப்படுத்திய துக்ளக் ஆசிரியர்.

By Ezhilarasan BabuFirst Published Apr 28, 2021, 12:51 PM IST
Highlights

டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை, ஒரு பேரழிவின் போது தடையின்றி ஆக்ஸிஜன் வழங்க அவர்கள் ஒருபோதும் திட்டமிடவில்லை, அவர்கள் லாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தனர். 

கொரோனா விவகாரத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தோல்விக்கு இப்போது அரசாங்கத்தின் மீது பழி போடப்பட்டிருக்கிறது.  பகுத்தறிவுக்கு தொடர்பின்றி அரசுக்கு எதிராக திட்டமிட்டு செய்யப்படும் பிரச்சாரம் இதற்கு காரணம் என்றும், இது பல உண்மைகளை மறைத்திருக்கிறது எனவும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பொருளாதார வல்லுநர், அரசியல்  விமர்சகருமான ஆடிட்டர் குருமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு அவர் புள்ளி விவரத்துடன், ஆதாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள கட்டுரையின் முழு விவரம் பின்வருமாறு: 

ஐந்தில் ஒரு பங்கு இந்திய மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களாக எந்த covid-19 தொற்றுகளும் பதிவாகவில்லை, கோவிட் தொற்று கட்டுக்குள் இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது பிப்ரவரி 15 அன்று அறிவித்தார்.கடந்த ஆண்டு 90,000 ஆக இருந்த நோய்த்தொற்று வெறும் 9 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் திடீரென அது பேரழிவாக மாறியது.  இந்த மோசமான நெருக்கடிகளை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஒட்டுமொத்த தேசத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் துர்திஷ்டவசமாக டெல்லியில்  ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் ஒட்டுமொத்த சூழலையும் உணர்ச்சிவயமாக மாற்றியது. அதை வைத்து கொஞ்சமும் பகுத்தறிவுக்கு எட்டாத, சம்மந்தமே இல்லாமல் நடந்த தவறான பிரச்சாரங்கள், அடிப்படை ஆதாரமில்லாமல் நடந்த விவாதங்கள் கொரோனாவை ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும் என்ற இலக்கை சேதப்படுத்தியதுடன்,  பல உண்மைகளை குழி தோண்டி புதைத்துள்ளது. 

லாபக்காரர்களின் புகார்:

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடந்த மரணங்கள் முதன் முதலில் டெல்லியில் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தான் நிகழ்ந்தன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த மருத்துவமனைகள் கொள்ளை லாபத்தை ஈட்டின. " covid-19 காலங்களில் லாபம்"  என்ற தலைப்பில் நேஷனல் ஹெரால்டு என்ற இணையதளம் கட்டுரை எழுதியது. அந்த அளவிற்கு மருத்துவமனைகள் லாபம் பார்த்தன,மேலும் " இது தனியார் மருத்துவமனைகளை அரசு கைப்பற்றுவதற்கான நேரமா.? " எனவும் அது கேள்வியை எடுத்துரைத்தது. (20-6-2020)

அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் 25,090 ,ரூபாய் 53,090, ரூபாய் 75,590, ரூபாய் 5,00,000 , ரூபாய் 6,00,000 , ரூபாய் 12,00,000, என எண்கள் வெளியிடப்பட்டன, இது ஏதோ ரேண்டம்  எண்கள் அல்ல,  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான ஒரு நாள் மற்றும் இரண்டு வாரத்திற்கான கட்டண தொகைகள் தான் இவை. அதாவது, பேக்கேஜ் முறையில் நோயாளிகளிடம் இருந்து இந்த தனியார் மருத்துவமனைகள் வசூல் வேட்டை நடத்தின. (பிபிஇ) எனப்படும் முழு உடற் கவச உடை கொரோனா பரிசோதனை மற்றும் மருந்து என அந்த மருத்துவமனைகள் வசூல் செய்தவை ஒரு குடும்பத்தின் ஒரு ஆண்டு வருமானத்தை என்றால் அது மிகையல்ல.ஆனால் இதே மருத்துவமனையின் ஆலோசனையில் ஒருவர் வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதற்கும் 5, 700 முதல் 21,900 உரை அந்த மருத்துவமனைகள் வசூல் செய்தன. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றமே இதை கண்டித்தது.

அதனையடுத்து சுகாதாரம் வழங்குனர்கள் சங்கம் மற்றும் (எஃப் ஐ சி சி ஐ) உறுப்பினர்கள் கட்டணங்களை ஒழுங்குபடுத்த ஒப்புக்கொண்டனர். பொது வார்டுக்கு தினசரி கட்டணம் ரூபாய் 15,000 மற்றும் ஆக்சிஜனுக்கு 5000 , ஐ.சி.யுவுக்கு ரூபாய் 25 ஆயிரம் மற்றும் வென்டிலேட்டர்களுக்கு ரூபாய் 10,000 என சுகாதார வழங்குனர்கள் சங்கம் கட்டணம் வெளியிட்டது. ஆனால் எஃப் ஐசிசிஐயின் கட்டண விகிதங்கள் சற்று அதிகமாகவே இருந்தன, அதாவது நாள் ஒன்றுக்கு பொது வார்டுக்கு 17000 முதல் 45 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்தது. சாதாரண (பிபிஇ)  கிட்டுகளை 375- 500க்கு வாங்கி நோயாளிகளுக்கு 10 முதல் 12 மடங்கு அதிகமாக விற்பனை செய்து தனியார் மருத்துவமனைகள் கொள்ளை லாபம் ஈட்டின. சென்னை மும்பை போன்ற நகரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என  ஹெரால்டு நாளிதழ் பகிரங்க படுத்தியது.

இப்படிப்பட்ட இந்த மருத்துவமனைகள் இப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி " உயிர்வாழ்வது மனித உரிமை " எனக்கூறி அந்த உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜனை அரசாங்கம் வழங்குவது அவசியம் என வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளன.  இந்த ஆக்சிஜனுக்காக அவர்கள் நோயாளியிடம் இருந்து ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான விவாதத்தில், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையடிக்கும் கொடூரமான இந்த உண்மைகளை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  இது மிக முக்கியமானது,  ஏனென்றால் லாபமீட்டும் மருத்துவமனைகள் தங்களது மருத்துவமனைகளில் சொந்த ஆக்சிஜன் ஆலைகளை மிகக் குறைந்த  செலவில் அமைத்திருக்க முடியும், ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. 

ஆக்சிஜன் தனியார் மயமாக்கப்பட்டது கட்டுப்பாடற்றது:

ஆக்சிஜன் உற்பத்தி, வர்த்தகம், இருப்பு மற்றும் பயன்பாடு முற்றிலுமாக தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜனின் வர்த்தகம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்படவில்லை, இருப்பினும் அதன் விலைகள் தேசிய மருந்து விலை ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன, ரசாயனங்கள் மற்றும் உர அமைச்சகத்தின்கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக அது உள்ளது. ஆக்சிஜன் தயாரிப்பாளர்கள் தனியார் ஒப்பந்தத்தின் மூலம் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள்,  மற்றும் அரசாங்கத்திற்கு ஆக்சிஜனை வழங்குகின்றன. அதேபோல அவசர நிலைக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்று மருத்துவமனைகளே திட்டமிடுகின்றன. டெலிவரி செய்வதற்கான நேரத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப ஆர்டர் செய்யப்படுகிறது, நேரம் மற்றும் தூரத்தை மையமாகக் கொண்டு ஆக்சிஜன் வினோயோகம் நடைபெறுகிறது.

குறிப்பாக டெல்லி மருத்துவமனைகளுக்கு அவை பல மாநிலங்களில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. ஆக ஒரு சாதாரண நேரத்தில் கூட துள்ளியமாக குறிப்பிட்ட நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு திட்டமிடல் தேவை. ஆனால் மருத்துவமனைகள் தங்களுக்கு தொடர்ச்சியான தேவைகளுக்காக ஆக்சிஜனை முறையாக திட்டமிடவில்லை, மாறாக அவர்கள் செலவைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்தினர். ஆக கடந்த பத்து நாட்களாக நடந்து வரும் இந்தக் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் மருத்துவமனைகளின் இந்த பொறுப்பற்ற செயலை யாராவது கேள்வி கேட்டீர்களா.?

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை: 

இரண்டாவதாக மிக முக்கியமானது, நாட்டில்ஆக்சிஜன் பஞ்சமில்லை, நாம் ஒரு நாளைக்கு 1 லட்சம் டன் உற்பத்தி செய்கிறோம். குஜராத்தில் ஒரு நிறுவனம் மட்டும் அதில் ஐந்தில் ஒரு பகுதியை உற்பத்தி செய்கிறது. உற்பத்தி செய்யப்படும் மொத்தத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே அதாவது 1%  மட்டுமே மருத்துவ ஆக்சிஜன் ஆகும்.  கோவிட் நெருக்கடியில் கூட இது 5 - 6  சதவீதத்துக்கு மேல் தேவைப்படவில்லை. குறிப்பாக ஆக்சிஜன் தொலைதூர பகுதிகளில் குவிந்துள்ளன, திரவ வடிவத்தில் ஆக்ஸிஜன் வர்த்தகம் செய்யப்பட்டு அது கனமான, பாதுகாப்பான டேங்கர்கள் மூலம் அடைத்துக் கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 45 லட்சம் செலவாகிறது, இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் ரூபாய் 300 மதிப்புள்ள ஆக்சிஜனை ஒரு சிலிண்டரில் அடைத்துக் கொண்டுவர 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.  ஆக்சிஜனில் தொலைதூர உற்பத்தி மற்றும்  பல வர்த்தக சங்கிலிகளுக்கே இது செலவாகிறது. டேங்கர் லாரிகளன் போக்குவரத்து மற்றும் சிலிண்டர்களில் சேமித்தல், ஆகியவை சாதாரண காலகட்டங்களில் கூட மிகப்பெரிய தளவாட சிக்கல்களை உருவாக்குகிறது. ஆகவே நோய்த்தொற்று உச்சம் அடையும் போது இந்த விநியோகச் சங்கிலி கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. குறிப்பாக டெல்லியில் இறப்புகள் நிகழ்ந்த இடத்தில், ஆக்சிஜனை கொண்டு செல்ல வேண்டிய இடத்தில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில்  இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படும் போது ஒரு அசாதாரணமான அழுத்தம் உருவாகிறது. இதுவே பிரச்சனைக்கு காரணம். 

லாபக்காரர்கள் தோல்வியுற்றனர், ஆனால் பழியை அரசின் மீது போட்டனர்: 

கடந்த ஆண்டு கொரோனாவுக்குப் பிறகு ஒவ்வொரு டெல்லி மருத்துவமனையும் தங்களது மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவை அமைத்திருக்க வேண்டும், 40 ஐசியு படுக்கைகள் கொண்ட 240 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜன்  பயன்படுத்தப்படுகிறது என தி பிரிண்டின் அறிக்கை கூறுகிறது.

பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் ( பி எஸ் ஏ)  ஆக்சிஜன் ஆலை அமைக்க ரூபாய் 50 லட்சம் மட்டுமே செலவாகும், அதை வெறும் 18 மாதங்களுக்குள் ஈட்டிவிட முடியும்,  எனவே ஒவ்வொரு டெல்லி மருத்துவமனையும் அதை வாங்க முடியும், ஆனால் ஒரு ஆக்சிஜன் ஆலைக்கு தங்களின் விலைமதிப்பற்ற இடத்தை ஒதுக்க யாரும் தயாராக இல்லை, அதற்கு பதிலாக பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து ஆக்சிஜனை வாங்க அவர்கள் தயாராக இருந்தனரே தவிர தங்களது மருத்துவமனை வளாகத்திலேயே தயாரிக்க விரும்பவில்லை. ஆக்சிஜன் விநியோகச் சங்கிலியில் உள்ள அபாயங்கள் குறித்து கடந்த ஆண்டு கேரளாவில் திருச்சூரில் உள்ள மயக்கமருந்து மற்றும் சிக்கலான பராமரிப்பு துறையின் ஜூபிலி மிஷன் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஷெரிப் பால், ஜான் பால் மற்றும் அகில் பாபு ஆகியோரால் நடத்தப்பட்ட ஆய்வின் கட்டுரை " இந்திய மருத்துவமனைகளின் பேரழிவு, தயாரிப்பு பற்றிய ஒரு கணக்கெடுப்பு " என்ற தலைப்பில் இந்தியன் ஜெர்னல் ஆப் சுவாச பராமரிப்பு இதழில் கட்டுரையாக வெளியானது.

அதில், இந்தியாவில் பெரும்பாலான மருத்துவமனைகள் ஆக்சிஜனுக்கு ஒரே இடத்தில் ஒரே குழாய் திட்டத்தையே நம்பியுள்ளன. இது பேரழிவு காலத்தின்போது இது மோசமான விபத்துக்களை சந்திக்க வைத்துவிடும். எனவே ஒரு திரவ ஆக்சிஜன் ஆலைகளை மருத்துவமனையின் அருகமையில் பல ஆக்சிஜன் ஆதாரங்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் பரிந்துரைத்தனர்.

ஆனால் இந்த எச்சரிக்கையை டெல்லி மருத்துவமனைகள் கண்டுகொள்ளவில்லை, புறக்கணித்தன, டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை, ஒரு பேரழிவின் போது தடையின்றி ஆக்ஸிஜன் வழங்க அவர்கள் ஒருபோதும் திட்டமிடவில்லை, அவர்கள் லாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருந்தனர். எனவே அவர்களது சப்ளை திட்டம் தோல்வி அடைந்தது. அப்படிப்பட்டவர்கள் இப்போது அரசியலமைப்பை மேற்கோள்காட்டி,  உயிர் வாழ்வது மனித உரிமை என கூறி, அதற்கான ஆக்சிஜனின் மத்திய அரசு வழங்க வேண்டும் என அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை நாடினர்.  அப்போது நீதிமன்றம் கொடுத்த உத்தரவால் உண்மையிலேயே ஒட்டுமொத்த பழியையும் அரசாங்கத்தின் மீது  திருப்பப்பட்டது.  கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் கொரோனா தொடர்பான விவாதங்கள் அதன் பின்னால் புதைந்திருக்கும் உண்மைகள் குறித்து பொதுமக்களுக்கு ஏதாவது யோசனை அல்லது விவரம் உள்ளதா என ஆடிட்டர் குருமூர்த்தி ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

மருத்துவமனைகள் 129 இடத்தில் உள்ள ஆக்சிஜன் ஆலைகளை முறியடித்தன: 

தற்போதைய ஸ்டென்டோரியன் பிரச்சாரம் பல உண்மைகளை மறைத்து இருக்கிறது. மருத்துவமனைகளின் விநியோகச் சங்கிலி தோல்விக்கு அரசாங்கத்தின் மீது பழி சுமத்தப்பட்டிருக்கிறது. முக்கியமான உண்மைகளை இது தவர விடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு சர்ச்சையை எதிர்பார்த்து மோடி அரசு கடந்த அக்டோபர் மாதம் இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 200 கோடிக்கு மேல் 162 (பிஎஸ்ஏ) பிரஷர் ஸ்வீங் அட்ஸார்ப்ஷன்  அதாவது ஆக்ச்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கு உத்தரவிட்டது, 

இதன் மூலம் நிமிடத்திற்கு 80 ஆயிரத்து 500 லிட்டர் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்து இருக்கலாம், இதில் ஒரு ஆலை ஒரு நாளைக்கு சுமார் 1 டன் மருத்துவமனை ஆக்சிஜனாக உருமாற்றி இருக்கலாம். ஆனால் 162 மருத்துவமனைகளுக்கு ஆர்டர் செய்யப்பட்ட ஆலைகளில் 33 மட்டுமே நிறுவப்பட்டுள்ளன ஏன்.? மாநில அரசு  மருத்துவமனைகள் கூட தங்களது சொந்த இடத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி வசதிக்கான மத்திய அரசின் திட்டத்தை நிராகரித்தன.

அதாவது டிசம்பர் மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ மருத்துவமனைகள் ஆலைகளுக்கு ஆர்டர் கொடுத்தனர் என்றும், ஆனால் ஆலைகளை பொருத்த அந்நிறுவனங்கள் மருத்துவமனைகளை அணுகியபோது அவர்கள் அதை வேண்டாம் என்று புறக்கணித்ததாக நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது மருத்துவமனைகளில் மோசமான நாடகத்தனம், பாசாங்கு திவர வேறென்ன.?  

கோவிட் சுனாமி பழையது போன்று அல்ல, முற்றிலும் மாறுபட்டது: 

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து நடந்து வரும் வாதங்களுக்கு மத்தியில் ஒரு முக்கியமான உண்மை உள்ளது. தற்போது கோவிட் சுனாமி பழையது போன்று அல்ல மாறாக முற்றிலும்  எதிர்பாராத புதியது, இது ஒரு நரகத்தைப் போல பெருகும், மார்ச்  முதல் வாரத்தில் உயரத் தொடங்கிய கோவிட், ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களில் உச்சத்தை அடைந்து பின்னர் அது சுனாமியாக மாறியது.  7 வாரங்களில் பீகார் தினசரி நோய்த்தொற்று  522 மடங்கு, உ.பி 399 மடங்கு, ஆந்திரா 186 மடங்கு, டெல்லி மற்றும் ஜார்கண்ட் 150 மடங்கு, மேற்கு வங்கம் 142 மடங்கு மற்றும் ராஜஸ்தான் 173 மடங்கு அதிகரித்துள்ளது.  இது ஒரு பேரழிவு.  யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு சுனாமியாக மாறியுள்ளது. இது கடந்த ஆண்டு கோவிட் 1.0 என்பது போன்று இல்லை, இது ஒரு புதிய இரட்டை விகாரமான இந்திய வகையாகும். எந்த நிபுணரும் இதை எதிர்பார்த்திராத அளவுக்கு உள்ளது. இது மருத்துவமனைகள் மற்றும் ஆக்சிஜன் என அனைத்து திட்டங்களையும் மூழ்கடித்துள்ளது. 

தேசம் ஒன்றுபட வேண்டும்: 

இதுவரை நாடு சந்தித்திராத இந்த சுனாமியை எதிர்கொள்ள ஒவ்வொருவருக்கும் பொறுப்பு அவசியம். அனைவரிடமும் அதற்கான உந்துதல் வேண்டும், மோசமான பிரச்சாரங்களின் மூலம் உண்மைகளை மறைக்கக்கூடாது, கோவிட் போன்ற ஒரு தேசிய பேரழிவை எதிர்கொண்டாலும் கூட கூட்டு விருப்பம் இல்லாதிருப்பது கவலை அளிக்கிறது. அவசரகால பயன்பாட்டிற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவாக்சின் என்ற தடுப்பூசியை எதிர்க்கட்சிகள் எவ்வாறு முத்திரை குத்தின என்பதை இந்த தேசிய பற்றாக்குறை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள்  ரன்தீப் சிங், சுர்ஜேவாலா,  சஷி தரூர், மணிஷ் திவாரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர்  கோவாக்சினுக்கு எதிராக கோரசில் கூச்சலிட்டனர். இது ஆபத்தானது என்று ஆனந்த் சர்மா கூறினார். ராஜஸ்தானை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பஞ்சாப், சதீஷ்கர், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை தடுப்பூசிகள் குறித்து மக்கள் மனதில் சந்தேகங்களை விதைத்தனர்.

மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள தயங்கினர். ஜனவரி மாதத்தில் 33 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள தயாராக இருந்தனர். 40 சதவீதம் பேர் காத்திருக்க விரும்பினர், 16% பேர் அதை எடுத்துக் கொள்ளவே மாட்டோம் என மறுத்தனர். மார்ச் மாதத்தில் விருப்பமுள்ளவர்கள் 57 சதவீதமாக உயர்ந்தனர், காத்திருக்க விரும்புவதாகக் கூறியவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது, போட்டுக் கொள்ள மாட்டோம் என்றவர்கள் 6% குறைந்துள்ளனர். இப்படி தவறான பிரசாரங்களால் கடந்த மூன்று மாதங்களை வீணடித்துவிட்டது. சராசரியாக தினசரி 30 லட்சம் தடுப்பூசி போடுவதால் ஒரு மாதத்திற்கு 9 கோடி ஆகிறது, ஆனால் இப்போது 10.8 கோடி பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 
 

click me!