தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ஒன்றிய அரசாங்கம் தமிழக மீனவர்கள் தானே என்று அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வளாகத்தில் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரணம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் முதலமைச்சர் உத்தரவுப்படி இன்றைக்கு மீனவர்களுடைய நிவாரண வழங்கும் வகையில் மீனவர்கள் 1500 ரூபாய் வழங்கினால் அரசு 3 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, கடலோர மாவட்டங்களில் ராமநாதபுரம் வரை அவர்களது வங்கி கணக்கில் சேர்த்து விட இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம். கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை துவங்கி வைத்ததாக கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதுவரை இல்லாத வகையில் மீனவர்களுக்கான மாநாட்டை முதல்வர்கள் நடத்தினார்கள், அதில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் வெளியிட்டு அதை நடைமுறை படுத்தும் வகையில் இன்றைக்கு செயல்பட ஆரம்பித்திருக்கிறது. மீன்பிடித் தடை காலத்தில் ஐந்தாயிரம் ரூபாய் உயர்த்தி நிவாரணம் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ள மீனவர்களுக்கு நிவாரணம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட அரசாணை வெளியிட பட்டது.
நாட்டுபடகுகளுக்கு மண்ணெண்ணைக்கு 3400 ல் இருந்து 3700 லிட்டராக உயர்த்துவார்கள் என்று கூறியபடி அதற்கும் அரசாணை வழங்கப்பட்டுள்ளது. விபத்து காப்பீட்டில் 250 மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இன்றைக்கு அரசாணையாக வழங்கப்பட்டுள்ளது. இது போன்று 11 பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கடலோரங்களில் மேம்பாட்டு திட்டம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வெகு விரைவில் அதை ஆய்வு செய்து ஒன்றிய அரசாங்கத்துக்கு அனுப்பி அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் இலங்கையில் பிடிக்கப்பட்டால் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதங்களை அனுப்பி மீனவர்களை காக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அதிகாரம் என்பது ஒன்றிய அரசிடம் இருக்கிறது. அந்த ஒன்றிய அரசு நினைத்தால் படுகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க முடியும்.
அதிமுகவின் தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்படுகிறது பொள்ளாச்சி ஜெயராமன் ஆதங்கம்
ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள், கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். படகுகளை இழந்து தவிக்கும் மீனவர்கள் இன்றைக்கு படும் கஷ்டங்களை முதல்வர் பார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் ஒன்றிய அரசாங்கம் அவர்களை ஏமாற்றுகிறது. மீனவர்கள் வருந்தக்கூடிய நிலைதான் இன்று தமிழகத்தில் இருக்கிறது. அமைச்சர் டி ஆர் பாலு அவர்களும் ஒன்றிய அரசாங்கத்தை அணுகி மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் அதற்கான மனுவை அளித்து வந்தார்.
இந்த ஒன்றிய அரசாங்கம் தமிழக மீனவர்கள் தானே என்று அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என குற்றம் சாட்டினார்.