எடப்பாடி வாகனத்தின் மீது யார் கல் எரிந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும், தொட்டிலை ஆட்டி விட்டு பிள்ளையும் கிள்ளி விடுகிறார் ஓபிஎஸ். இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேவர் குரு பூஜை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார். கடந்த ஐந்து நாட்களாக அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்க கவசம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்துட்டு வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.
காவாலி பயலுக கல்லை எரிந்திருப்பார்கள்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பசும்பொன்னில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிராக கோஷமிட்டது எங்களுக்கு தெரியாது. ஊடகத்தின் வாயிலாக தான் பிரச்சினை தெரிய வந்துள்ளது. எதோ இரண்டு காவாலி பயலுக கல்லை விட்டு எறிந்து இருப்பான்கள்.
பசும்பொன் வந்த எடப்பாடிக்கு முதல்வருக்கு வழங்கிய பாதுகாப்பு போல் உரிய பாதுகாப்பு காவல்துறையால் கொடுக்கப்படவில்லை, முதலமைச்சர் சென்ற பிறகு காவல்துறையிடம் கட்டுப்பாடு அங்கு இல்லை. பவுன்சர்களின் பாதுகாப்புடன் தான் எடப்பாடி பசும்பொன் நிற்கு வந்தார். காவல்துறை திட்டமிட்டு எங்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் நீலிக்கண்ணீர்
எடப்பாடி பழனிசாமி வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ஓ பன்னீர்செல்வம் ஏன் இரட்டை இடம் போடுகிறார். தொட்டிலை ஆட்டி விட்டு பிள்ளையும் கிள்ளி விடுகிறார் ஓபிஎஸ். இந்த நாடகம் எல்லாம் அதிமுகவிடம் எடுபடாது. ஓபிஎஸ் ஏற்கனவே பல தோல்விகளை சந்தித்துள்ளார். வாகனத்தின் மீது யார் கல் எரிந்தார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் மகாத்மா காந்தியை போல் ஓபிஎஸ்ஐ ஒப்பிட வேண்டாம்.
ஏற்கனவே ஓபிஎஸ் இடம் இந்த மாதிரி பல நீலி கண்ணீர் நாடகங்களை பார்த்து உள்ளோம். ஓபிஎஸ் இன் நாடகத்தை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லையென கூறினார். எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம் என்கின்ற கேள்வியே கேவலமான கேள்வி. இதற்கு அண்ணாமலை ஏன் சிரித்தார் எதற்கு சிரித்தார் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
பாஜக தொண்டர்களை பார்த்து அச்சப்படும் திமுக...இனி திமுவின் பயம் எப்போதும் தொடரும்- அண்ணாமலை