தடையை மீறி கொடி கம்பம் நட சென்ற பாஜகவினர்..! அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த போலீஸ்

By Ajmal Khan  |  First Published Nov 1, 2023, 1:28 PM IST

தமிழகத்தில் 10ஆயிரம் கொடிகம்பம் நடப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், கொடிக்கம்பம் நட சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


பாஜக கொடிகம்பம் அகற்றம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு சென்னை பனையூரில் அமைந்துள்ளது. கடந்த 20ஆம் தேதி அண்ணாமலையின் வீடு முன்பு அனுமதி பெறாமல் பாஜகவின்  கொடி கம்பம் நடப்பட்டது. இதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கொடுக்கம்பத்தை போலீசார் அகற்றினர். இதன் காரணமாக போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

அப்போது கொடிக்கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனம் அடித்து உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பம் நடப்படும் என அண்ணாமலை அறிவித்தார்.

பாஜகவினர் கைது

அதன்படி இன்று பாஜகவின் கொடிக்கம்பத்தை நட பாஜகவினர் பல மாவட்டங்களில் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உரிய முறையில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் அனுமதி பெறாத காரணத்தால் கொடிகம்பம் அமைக்க காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இந்தநிலையில், தடையை மீறு தமிழகத்தில் பல இடங்களில் கொடிக்கம்பங்கள் நட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.  திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தனர். 

மாநில தலைவர் அறிவுறுத்தலின் படி இன்று முதல் 10000 பாஜக கொடிகம்பம் அமைக்கும் வகையில், இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அனைத்து கட்சிகளின் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற விடாமல் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் திமுக அரசின்… pic.twitter.com/Rhfdt9qFvD

— BJP Tamilnadu (@BJP4TamilNadu)

 

பாஜக கண்டனம்

இதே போல கோவை மசக்காளிபாளையம் சந்திப்பில் பாஜக கொடி ஏற்ற அனுமதி இன்றி கூடியதாக கட்சித் தொண்டர்கள் 57 பேர் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கூடினர்.  அப்போது அங்கு வந்த காவல்துறையினர் கொடிக்கம்பம் விவகாரம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கூட்டம் கூடாமல் கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது காவல்துறையில் இருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கொடி ஏற்றுவோம் எனக்கூறி பாஜகவினர் முற்றுகை விட்டதால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 10 பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

அண்ணாமலையின் அறிவிப்புக்கு செக் வைத்த காவல்துறை...கொடிக்கம்பம் அமைப்பதில் சிக்கல்- அதிர்ச்சியில் பாஜக

click me!