விண்ணை முட்டும் சிமெண்ட் ,கம்பி விலை.. வீடு கட்ட முடியாமல் திணறும் நடுத்தர மக்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

By Ezhilarasan BabuFirst Published Feb 12, 2021, 3:37 PM IST
Highlights

சிமெண்ட்  கம்பி விலை உயர்வு கட்டுமான தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் ஒரு மூட்டை சிமெண்ட் 320 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை விற்கப்பட்டது,  

சிமெண்ட்  கம்பி விலை உயர்வு கட்டுமான தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. கொரோனா பாதிப்பு ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் ஒரு மூட்டை சிமெண்ட் 320 ரூபாய் முதல் 340 ரூபாய் வரை விற்கப்பட்டது, ஆனால் தற்போது அதன் விலை 425 ஆக உயர்ந்துள்ளது, அதேபோல் எம்சாண்ட், ஜல்லி விலை உயர்வும் அதிகரித்துள்ளது, கம்பி விலை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது, ஒரு ட்டன் 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 65  ஆயிரத்தையும் தாண்டியுள்ளது இதனால் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது. 

இந்நிலையில்,சிமெண்ட் ,கம்பி மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அகில இந்திய கட்டுமான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்டுமான நிறுவனர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அகில இந்திய கட்டுமான சங்கத்தின் தென்ன கமய்யத் தலைவர் சாந்தகுமார், "கம்பி மற்றும் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சி கருதி மத்திய அரசு கம்பி மற்றும் சிமெண்ட் விலை உயர்வை தடுக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். மீண்டும் அம்மா சிமெண்ட் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மாநில அரசு சிமெண்ட் மற்றும் கம்பி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து கட்டுமான தொழிலை காப்பாற்ற வேண்டும். தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். 

கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளின் விலை டன் ஒன்றுக்கு 42 ஆயிரத்தில் இருந்து 72,000 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் மூட்டையின் விலை மூட்டை ஒன்றின் மீது 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இதனால் கட்டுமான விலை சதுர அடிக்கு 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. இதன் மீது அரசின் கவனத்தை ஈர்க்க நாடு முழுவதும் 12ஆம் தேதி கட்டுமான அமைப்புகள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

click me!