கேட்டது வாரியம்... கொடுத்தது அதிகாரமிக்க ஆணையம்... சுப்ரீம் கோர்ட் அதிரடி

Asianet News Tamil  
Published : May 18, 2018, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
கேட்டது வாரியம்... கொடுத்தது அதிகாரமிக்க ஆணையம்... சுப்ரீம் கோர்ட் அதிரடி

சுருக்கம்

cauvery management created by supreme court

காவிரி வரைவு திட்டத்தை மே 14ந்தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன் நகலை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மீதான விசாரணை என்பது நடந்து வருகிறது. 

இந்நிலையில் நடந்த வாதங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை நேற்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன்படி அமைக்கப்பட்ட குழுவிற்கு காவிர் ஆணையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இதன் தலைமையகம் பெங்களூரிலிந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீர்பங்கீடு குறித்த இறுதி முடிவை ஆணையமே எடுக்கும் ஆணையம் விரும்பினால் மத்திய அரசு தலையிடும் எனக் கூறியுள்ளது. 

அணியை திறக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு வேண்டுமென தமிழக அரசு கோரியது அதற்கான தீர்ப்பை இன்று சொல்வதாக கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையின் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். 

பருவமழை தொடங்கும் முன்பு ஜூன் முதல் வாரத்துக்குள் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை அரசு இதழில் வெளியிட வேண்டும், புதிதாக அமைக்கப்பட்டதற்கே ஆணையத்துக்கே முழு அதிகாரம் அணையின் நீர் இருப்பு நீர் வரத்து விவரங்களை மாதம் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். 

தகவல்களை வைத்து நீர் திறக்க வேண்டும் என்ற ஆணையை ஆணையமே மாநில அரசிடம் உத்தரவிடும். நீர் இருப்பு விவரத்தை தெரிவிக்க மாட்டோம் என கூறிய கர்நாடாக அரசின் வாத்த்தை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!