12.30 AM! 7 காரில் பவுன்சர்ஸ்... 3 சொகுசு பஸ்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சந்திரசேகர ராவ்... த்ரில்லிங் நைட் பயணம்!  

First Published May 18, 2018, 1:43 PM IST
Highlights
JDS Cong get support from Telangana


பிஜேபிக்கு பயந்து காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மொத்தமாக ஈகிள்டன் சொகுசு விடுதியில், தங்கி இருந்தனர். ஆனால், முதல்வராக எடியூரப்பா அரசு பதவி ஏற்றதும் அங்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் வேறு மாநிலத்திற்கும் மாறும் முயற்சி எடுத்தனர். 
 

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு தமிழகம் பாதுகாப்பு தருவதாக தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என  மொத்தமாக எப்போது வந்தாலும் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்றது. ஆனால் இவர்கள் எங்கு செல்வது என்பதை ரகசியமாக வைத்திருந்தனர். 

இதனையடுத்து இவர்கள் நேற்று இரவே கேரளா கிளம்ப வாய்ப்புள்ளது என்று சொல்லப்பட்டது இதற்காக  முன்னேற்பாடுகள் நடந்தது.  இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும், மஜத எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை வழங்க முன் வந்துள்ளதாகவும் உடனே வர கேரள முதல்வர் பினராயி விஜயனின் அழைத்ததால், நேற்று இரவு எச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து எம்எல்ஏக்கள், பெங்களூர் புற நகரிலுள்ள ரிசார்ட்டிலிருந்து கொச்சி நோக்கி செல்ல இருந்தனர்.  ஆனால் கடைசி நேரத்தில் எம்எல்ஏக்கள் செல்லவிருந்த தனி விமானத்திற்கு மத்திய விமான போக்குவரத்து இயக்ககம் அனுமதி மறுத்தது.

இதனால் அவர்கள் கேரளா செல்வது சிக்களாகியது. கடைசி நேரத்தில் என்ன செய்வது அறியாமல் திணறியபோது எம்எல்ஏக்கள் மிகவும் வயதானவர்கள் என்பதால், இரவிற்குள் எதாவது ஏற்பாடு செய்ய வேண்டும் என்று யோசித்துள்ளனர். 

இந்த நிலையில் கடைசி நேரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உதவிக்கு வந்துள்ளார். அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக தெலுங்கானா செல்ல திட்டமிட்டு சென்றுள்ளனர். தெலுங்கானா எல்லையை அடைந்த பின் முழு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று கூறியதால் இரவு 12.30 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காரிலும், மஜத எம்எல்ஏக்கள் பஸ்ஸிலும் சென்று உள்ளனர்.  இவர்கள் பயணித்த போது, 7 காரிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு வீரர்கள் சென்றுள்ளனர். அதேபோல் பவுன்சர்ஸ் எனப்படும் குண்டு கட்டாக தூக்கி எறியும் பாதுகாப்பு நபர்களும் நூற்றுக்கணக்கில் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இவர்கள் மிகவும் த்ரில்லான பல விஷயம் மணிக்கொரு முறை நிகழ்ந்ததாம். தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் மடக்கி விசாரிக்க வாய்ப்புள்ளது, எதவாது பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்று இவர்கள் சென்ற ஷர்மா பேருந்தில் சென்று பின் ஆரஞ்ச் டிராவல் பேருந்திற்கு மாறியுள்ளனர், இதனையடுத்து மீண்டும் சர்மா பேருந்தில் சென்றுள்ளனர், வயதான எம்எல்ஏக்கள் வைத்துக் கொண்டு நடு இரவில் இரண்டு முறை பேருந்து மாறியுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் சரியாக 9 மணிக்கு ஹோட்டலுக்கு வந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஸ்டார் ஹோட்டலில்  அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1000க்கும் அதிகமான மாநில போலீஸ் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு ஹோட்டலுக்கு வெளியேயும் உள்ளேயும் நிறுத்தப்பட்டுள்ளது. 

click me!