
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் தலைமையில் ’காவிரியின் நமது குரல்’ என்ற அமைப்பில் அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டம். சென்னையில் தி.நகரில் கமல் தலைமையில் கூடியுள்ளது.
இதில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன், அய்யக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் பா.ம.க இளைஞர் அணி அன்புமணி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பங்கேற்பு, தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், ஆம் ஆத்மியின் வசீகரன், அர்ஜூன் சம்பத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முக்கிய கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை.
கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவும் மக்கள் நீதி மய்யமும் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா எனக் கேட்டதற்கு உள்ளாட்சித் தேர்தலே நடக்கப்போவதில்லை என்றும் இது அரசியல் மேடையல்ல விவசாயிகளுகான மேடை எனத்தெரிவித்தார். இங்கு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்த்து. நீர் மேலாண்மை வல்லுநர்களூம் இதில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
விவசாயிகள் குரல் கூட்டத்தில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவிரி டெல்டாவை பாதுக்காக்க சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குளங்கள், கம்மாய்கள் தூர்வார வேண்டும் சிறிய அணைகள் கட்டப்பட வேண்டும்மென போன்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.