ஆஹா...எடியூரப்பாவே பேரம் பேசுறாரே..!? ஆடியோவை லீக் செய்தது "காங்கிரஸ்"..!

Asianet News Tamil  
Published : May 19, 2018, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஆஹா...எடியூரப்பாவே பேரம் பேசுறாரே..!? ஆடியோவை லீக் செய்தது "காங்கிரஸ்"..!

சுருக்கம்

ediyoorappa spoke with congres mla and audio released by congress

எம்எல்ஏ விடம் பேரம் பேசுகிறார் எடியூரப்பா எனக் கூறி மீண்டும் ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளது காங்கிரஸ்

காங்கிரஸ் எம்எல்ஏ பாட்டில் உடன்  எடியூரப்பா பேரம் பேசியுள்ள ஆடியோவை தற்போது வெளியிட்டு உள்ளது காங்கிரஸ்.

அதில் எம்எல்ஏ பாட்டில் மற்றும் உடன் மூன்று எம்எல்ஏக்களை அழைத்து வருமாறு பேரம் பேசியுள்ளதாக கூறப் படுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை நான்கு மணிக்கு நடைபெற உள்ள  நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டியல் சூழல் நிலவி வருகிறது .

இன்று மாலை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவிற்கு  பெரும்பான்மை கிடைத்தால் தான் எடியூரப்பா முதல்வராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ  அனந்த்சிங் மற்றும் பிரதாப் படேல் இருவரும் காணவில்லை என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ பாட்டிலுடன் நூறு கோடி ரூபாக்கு பேரம் பேசுவதாகவும்,முதலில் 25  கோடி ரூபாய் தருவதாகவும் அதில் எடியூரப்பா  பேசுவதாகவும், மேலும்  அமைச்சர் பதவி கூட  தர இருப்பதாகவும் பேசி உள்ளதாக  ஆடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது

இதற்கு முன்னதாக பாஜக முன்னாள் அமைச்சர ஜனார்தனன் ரெட்டி காங்கிரஸ் எம்எல் ஏக்களுடன் குதிரை பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பாஜக ஆட்சி அமைக்க மேலும் 7 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!