
இன்று மாலை 4மணி அளவில் கர்நாடாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில் 104 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிப்பதற்காக இரு கட்சிகளூம் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் பேரம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.சி. பாட்டிலீடம் உங்களிடம் உள்ள மூன்று எம்.எல்.ஏக்களை அழைத்துவாருங்கள் என்றும் அமைச்சர் பதவியும் பணமும்தருவதாக கூறும் எடியூரப்பா பேசிய ஆடியோ வெளியானது.
இந்நிலையில் காங்கிரஸ் பா.ஜ.க கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பேரம் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெளியான ஆடியோவில் உள்ள குரல் எடியூரப்பாதான் என உறுதிசெய்துள்ளனர். இதனால் கர்நாடாக தேர்தல் பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது.