காணாமல் போன காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஒருவர் வந்துட்டாரு.. மற்றொருவர் எங்கே? கர்நாடக அரசியலில் அடுத்த அதிரடி

Asianet News Tamil  
Published : May 19, 2018, 01:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
காணாமல் போன காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் ஒருவர் வந்துட்டாரு.. மற்றொருவர் எங்கே? கர்நாடக அரசியலில் அடுத்த அதிரடி

சுருக்கம்

congress mla prathap gowda appeared in vidhan soudha

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்விற்கு வராத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கௌடா ஆகிய இருவரும் பாஜக எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டியின் பிடியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பிரதாப் கௌடா மட்டும் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டார்.

கர்நாடக அரசியல் சூழல் விறுவிறுப்பான கட்டத்த எட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அதற்கு முன்னதாக இன்று காலை எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்த பதவியேற்பு நிகழ்விற்கு ஆனந்த் சிங் மற்றும் பிரதாப் கௌடா ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் பாஜக எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டியின் பிடியில் கோல்டு ஃபின்ச் ஹோட்டலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரதாப் கௌடா மட்டும் சட்டப்பேரவைக்கு சற்றுமுன் வந்துள்ளார். ஆனால், ஆனந்த் சிங்கின் நிலை தெரியவில்லை.
 

PREV
click me!

Recommended Stories

என் நண்பனை விட்டுடுங்க... கெஞ்சும் பாகிஸ்தான்..! சவுதியை கதறவிடும் ஈரான்..!
காங்கிரஸ் நனைந்த பஞ்சு மூட்டை... தூக்கியெறிய தயாரான ஸ்டாலின்..! திமுகவுக்கு நஷ்டம்... கதர் பார்ட்டிக்கு கஷ்டம்..!