ஆப்சண்ட் ஆன காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்; பதவி பறிபோய்விடும் என காங்கிரஸ் எச்சரிக்கை.

First Published May 19, 2018, 1:22 PM IST
Highlights
congress warns his Karnataka legislative members for this reason


இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகராக, போப்பையாவை தேர்வு செய்திருக்கிறது பா.ஜ.க. இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற 104 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் பா.ஜ.க-விற்கு இன்னும் 7 எம்.எல்.ஏக்கள் தேவை.

அதே சமயம் 78 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் காங்கிரஸ் மற்றும் 37 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் ம.ஜ.த விற்கு , எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், தங்கள் தரப்பில் இருக்கும் யாரும் பா.ஜ.க பக்கம் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது தான், இப்போது பெரும் கடமை என்றிருக்கிறது.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான பிரதாப் கவுடா பாட்டீல் மற்றும் ஆனந்த் சிங் ஆகியோர், பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அவர்கள் இருவரும் சட்டசபை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இவர்கள் வராமல் இருந்துவிட்டால் காங்கிரசுக்கு 2 ஓட்டுகள் இழப்பு ஏற்படும். இதும் ஒரு வகையில் அவர்களுக்கு ஆபத்து தான். எனவே காங்கிரஸ் இப்போது அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும், கொறடா மூலம் ஒரு எச்சரிக்கையை அறிவித்திருக்கிறது.

அதன் படி அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக எடியூரப்பாவுக்கு எதிராக தான் வாக்களிக்க வேண்டும். என அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கொறடா. மீறினால் குறிப்பிட்ட எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோய்விடும் என கூற் பதவிக்கு செக் வைத்திருக்கிறது காங்கிரஸ்.

click me!