முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை விசாரணை நடத்தி, புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி ஊழல் கேஸை தூசு தட்டபோறோம்.. உயர்நீதி மன்றத்தில் திமுக அரசுக்கு ஷாக் கொடுத்த காவல்துறை..
undefined
இந்நிலையில் அதே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மீண்டும் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை விசாரித்து வருவதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளம்பிரையன் ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்டு அவர் மீததான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க;- ஆ.ராசாவின் நாக்கை அறுத்தால் 1 கோடி பரிசு... ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்து அமைப்பு நிர்வாகி கைது..!