கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை பேச்சு... சீமான் மீது வழக்குப்பதிவு!!

Published : Feb 22, 2023, 06:32 PM IST
கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சை பேச்சு... சீமான் மீது வழக்குப்பதிவு!!

சுருக்கம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல்களம் சூடுப்பிடித்துள்ளது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என் மீது வழக்குப்பதிவு செய்ததால் பயந்துடுவோமா? அண்ணாமலை ஆவேசம்!!

இதை அடுத்து அந்தந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக சீமான் கடந்த சில நாட்களாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி ஈரோடு திருநகர் காலனி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த சீமான், தமிழகத்தை சேர்ந்த அருந்ததியர் மக்கள் துப்புறவு தொழிலுக்காக ஆந்திராவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என சீமான் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியில் இணையும் காயத்ரி ரகுராம்.? நேற்று திருமா.. இன்று சீமான் - சந்திப்பின் பின்னணி என்ன.?

அவரின் இந்த கருத்த் சர்ச்சையானது. சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து உரிய விளக்கமளிக்க ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனிடையே சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிமுகவில் இணைக்கிறார் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி..! தவெகவில் சேர கேட் போட்ட பிடிஆர் டேப் மேட்டர்..!
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!