திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் திடீர் வழக்கு.! அதிரடி நடவடிக்கை எடுத்த ஆளுநர்..! அதிர்ச்சியில் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Jan 19, 2023, 12:16 PM IST
Highlights

ஆளுநர் ஆர்.என்,ரவியை அவதூறாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர்  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

திமுக-ஆளுநர் மோதல்

தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறினார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் எதரிவித்து இருந்தனர். குடியரசு தலைவரிடமும் திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு.! வடிவேலுக்கு ஆறுதல் சொன்ன ஸ்டாலின்

ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர்

இந்தநிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆளுநருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கிருஷ்ணமூர்த்தி பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆளுநர்ஆர்.என்.  ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124பிரிவில் நடவடிக்கை எடுக்க கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் தரக்குறைவாக பேசியதால், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் வழங்கப்பட்டுள்ளது.  

ஈரோடு இடைத்தேர்தல்..! சிக்கலில் இரட்டை இலை சின்னம்.! த.மா.கா விடம் தொகுதியை ஒப்படைக்க திட்டம் போட்ட இபிஎஸ்

அவதூறு வழக்கு தொடர்ந்த ஆளுநர் மாளிகை

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் செயலாளர், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கிருஷ்ணமூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் மீதான அவதூறு குற்றச்சாட்டில் ஆளும்கட்சியான திமுக பேச்சாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அதிர்ச்சி அடையவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

தமிழர்களை சீண்டி பார்த்தால் சும்மா இருக்க மாட்டார்கள்.. ஆளுநரை மறைமுக தாக்கி பேசிய கனிமொழி..!

click me!