அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மனித நேயமிக்கவர் கேப்டன்.. உருகிய பிரேமலதா விஜயகாந்த்.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2022, 2:24 PM IST
Highlights

கேப்டன் விஜயகாந்தை அரசியல் தலைவராக மட்டுமின்ற மனித நேயம் மிக்க நபராக மக்கள் பார்க்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அரசியல் சினிமாவை கடந்து மனிதநேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்தை அரசியல் தலைவராக மட்டுமின்ற மனித நேயம் மிக்க நபராக மக்கள் பார்க்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். அரசியல் சினிமாவை கடந்து மனிதநேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டன் விஜயகாந்தின் 70வது பிறந்த தினத்தையொட்டி,  தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் புடைசூய கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு கூறினார். 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 70வது பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்களால், கட்சித் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார் அவரது தொண்டர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாழ்த்துக் தெரிவித்துள்ளனர். நடிகர்கள், ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார், வானத்தைப்போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர் கேப்டன், எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தம் கேப்டன் விஜயகாந்த் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி விஜயகாந்தின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது, அதன் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார், அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் களத்துக்கு வந்து போராடுகிற கட்சி தேமுதிக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வை முதலில் கண்டித்து போராட்டம் நடத்திய தேமுதிக தான்,  கேப்டனை சந்திக்க வருகை தந்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி, அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மனித நேயம் மிக்கவர் கேப்டன் என மக்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த பிறந்தநாள் மிகவும் முக்கியமான பிறந்தநாள், இது அவரின் 70ஆவது பிறந்தநாள், ஒட்டுமொத்த தொண்டர்களையும் சந்தித்ததில் கேப்டனுக்கு மிக்க மகிழ்ச்சி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் என்ன முடிவு என்பது பின்னர் தெரியும், அந்த முடிவை கேப்டன் எடுப்பார்,  நடிகர் சங்க தலைவர் கார்த்திக் ஏற்கனவே கேப்டனை சந்திக்க வேண்டுமென நேரம் கேட்டிருந்தார், தற்போது இந்த பிறந்தநாளன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பங்கு அதிகமாக  இருக்கிறது என்றார், அப்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு விஜயலதா என்று பெயர் சூட்டினார். 
 

click me!