
நமது கொங்கு முன்னேற்ற கழகம் வேட்பாளர் ரமேஷ்க்கு தொப்பி சின்னம் வழங்கப் பட்டு உள்ளது
ஆர்.கே நகர் இடைதேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பனி மும்முரமாக நடைபெற்று வந்தது .மொத்தம் 72 போட்டியாளர்களில்,13 பேரின் வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டது
இந்நிலையில் தொப்பி சின்னத்தை கேட்டு விண்ணப்பித்த தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகளும் தொப்பி சின்னைதை கேட்டுள்ளதால், அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது
ஆனால் கடந்த ஆர்.கே நகர் தேர்தலின் போது தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது
நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி, உள்ளிட்ட கட்சிகள் சார்பாக தொப்பி சின்னத்தையே பதிவு செய்திருந்த சமயத்தில் குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்ற கழகம் வேட்பாளர் ரமேஷ்க்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது