
தன்னை முன்மொழிந்தவர்கள் காணவில்லை என்று நடிகர் விஷால் கூறியிருந்த நிலையில், எங்களிடம் கூறியிருந்தால் நாங்கள் தேடி தருகிறோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
விஷால் தேடும் இரண்டு பேரை நாங்கள் தேடி தருகிறோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு, நெட்டிசன்கள் பலவாறு கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். முதல்வன் படத்தில் ரகுவரன் பேசும் வசனத்தைபோல், "இவங்களே ஒளிச்சி வப்பாங்களாம்... இவங்களே தேடித் தருவாங்களாம்..." என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு அதிமுகதான் காரணம் என்று விஷால் குற்றம் சாட்டி வருகிறார். மதுசூதனின் ஆட்களே தனது வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபக் இருவரையும் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
விஷாலின் இந்த பேச்சு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நடிகர் விஷால் என்ன சூரப்புலியா? அவரைப்பார்த்து அதிமுக பயப்படுவதற்கு என்று கூறியுள்ளார்.
மேலும், செய்தியாளர்களிடம் பேசும்போது, முன்மொழிந்த 2 பேரைக் காணவில்லை என்று எங்களிடம் கூறினால், நாங்கள் அவர்களைத் கண்டுபிடித்து தருகிறோம் என்றும் அமைச்சர் கூறியிருந்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பலவாறு கலாய்த்த வருகின்றனர்.
விஷால் தேடும் இரண்டு பேரை நாங்கள் தேடி தருகிறோம் என்று அமைச்சர் கூறியதற்கு, முதல்வன் படத்தில் ரகுவரன் பேசும் வசனத்தை பதிவிட்டு கலாய்த்துள்ளனர். "இவங்களே ஒளிச்சி வப்பாங்களாம்... இவங்களே தேடி தருவாங்களாம்..." என்று பதிவிட்டுள்ளனர்.