ஆளுநரை பக்கத்துல வைத்துக்கொண்டு முதல்வர் இப்படி பேசலாமா? இது மரபுக்கு எதிரானது.. எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumarFirst Published Jan 9, 2023, 12:41 PM IST
Highlights

சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் செயலை முதல்வர் சட்டப்பேரவையிலேயே விமர்சித்து கொண்டு இருந்த போதே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினர். 

ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதனால் பன்னாட்டு உதவிகளை ஈர்த்து அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற வாசகத்தையும், தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற பதிவையும் ஆளுநர் படிக்காமல் அடுத்த, அடுத்த பக்கங்களுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில இடங்களில் தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு என்று ஆர்.என். ரவி குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிங்க;- ஆளுநர் தாமாக பேசிய எந்த உரையும் அவை குறிப்பில் பதிவேற்ற கூடாது..! அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

இந்நிலையில், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. அச்சடிக்கப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும். ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்து எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என கூறி சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் செயலை முதல்வர் சட்டப்பேரவையிலேயே விமர்சித்து கொண்டு இருந்த போதே கூட்டத்திலிருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறினர். 

இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பாதியில் வெளியேறினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் வாசித்த உரை வெற்று உரை. ஆளுநர் உரையில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆளுநரை வைத்துக்கொண்டு தீர்மானம் கொண்டுவந்து முதல்வர் பேசுவது சட்டப்பேரவை மரபுக்கு எதிரானது. கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் என விடியா திமுக ஆட்சியில்  சட்டம் ஒழுங்கு சீராக இல்லை.  விடியா திமுக ஆட்சியில் கஞ்சா, குட்கா, போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க;-  தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! அருகருகே அமர்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ்..! என்ன பேசிக்கொண்டார்கள் என தெரியுமா.?

click me!