தமிழக அரசின் அறிவிப்புகளை வாசிக்க மறுத்த ஆளுநர் .? சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறியதால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Jan 9, 2023, 11:49 AM IST

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக பதிவு செய்யப்பட்டதையும் அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பையும் ஆளுநர் ஆர்.என் ரவி படிக்காமல் அடுத்த அறிவிப்புக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


திராவிட மாடல் வார்த்தையை புறக்கணித்த ஆளுநர்

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை ஆர்.என் ரவி வாசிக்க தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதனையடுத்து தமிழக ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது7 வது அறிவிப்பையும்,  64வது அறிவிப்பில் சிலவற்றையும் 65 ஆவது அறிவிப்பு முழுதையும் வாசிக்க மறுத்து 66 வது அறிவிப்புச் சென்றது பரபரப்பாகி உள்ளது ஆளுநர் உள்நோக்கத்துடன் அறிவிப்பை வாசிக்க மறுத்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வாசிக்க மறுத்த, 7, 64வது மற்றும் 65வது அறிவிப்பில் இடம்பெற்ற வரிகளில் 7வது அறிவிப்பில் அலுவல்மொழிப் பயன்பாடு தொடர்பாக, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஏற்கெனவே இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது இதனை ஆளுநர் படிக்கவில்லை. 

Latest Videos

தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! ஆளுநருக்கு எதிராக கோஷம்..! அதிர்ச்சி அளித்த திமுக கூட்டணி கட்சிகள்

அமைதி பூங்காவாக தமிழகம்

இதே போல 64வது அறிவிப்பில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது. இதனால் பன்னாட்டு உதவிகளை ஈர்த்து அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற வாசகத்தை பேச மறுத்துள்ளார். இதே போல 65வது அறிவிப்பில்,  சமூகநீதி சுயமரியாதை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம் பெண்ணுரிமை மத நல்லிணக்கம் பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வாறு அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற பதிவையும் ஆளுநர் படிக்காமல் அடுத்த, அடுத்த பக்கங்களுக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் பேச்சு நீக்கம்

இதனையடுத்து ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார்அச்சிடப்பட்டது இல்லாமல் ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் புறப்படுட்டு சென்றார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! அருகருகே அமர்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ்..! என்ன பேசிக்கொண்டார்கள் என தெரியுமா.?

 

click me!