அண்ணாமலையின் ரபேல் வாட்ச் காஃபி டே அதிபரிடம் லஞ்சமாக பெற்றது - கொளத்தூர் மணி

Published : Jan 09, 2023, 11:01 AM IST
அண்ணாமலையின் ரபேல் வாட்ச் காஃபி டே அதிபரிடம் லஞ்சமாக பெற்றது - கொளத்தூர் மணி

சுருக்கம்

ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறும் அண்ணாமலை ரபேல் கடிகாரத்தை  பெற்றதற்கு முதலில் பதில் கூற வேண்டும் என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம்  மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களின் அறங்காவலர்களாக நியமிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை முடிவுகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும். நீதிமன்றங்களின் உத்தரவு பொருத்தமானதாக இருக்காது. நீதிமன்றங்கள் வரம்போடு நடந்து கொள்ளவேண்டும்.

திராவிட அரசியல் காரணமாக தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டதாக  கருத்து தெரிவிக்கும் ஆளுநர், அவருக்கான வேலையை மட்டும் முறையாக செய்தால் போதும். அரசின் அறிவுரைபடி செயல்படுவது மட்டுமே அவரது பணியாகும். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியலை  இங்கே  புகுத்துவது ஆளுநரின் பணி அல்ல. இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்களின்  விழாக்களை புறக்கணித்து விட்டு அரசு பணத்தில் தசரா பண்டிகைக்கு  கொலு  வைத்து கொண்டாடி வருகிறார்.

குமரியில் மகனின் கடனுக்கு உதவ முடியாத வருத்தத்தில் பெற்றோர் தற்கொலை

ஆளுநருக்கு விருப்பமாக இருந்தால் கமலாலயம் சென்று பாஜகவில் பொருப்பு வாங்கி கொண்டு அவ்வாறு செயல்படலாம். தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரால் ஒப்புதல் பெற்ற பிறகே தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. எனவே  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத சந்தேகம்  ஆளுநர் ரவிக்கு  வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஆளுநர் முதலில் மகாராஷ்டிராவின் பெயரை மொழிபெயர்த்து தெரிந்து கொண்ட பின் அதனை மாற்றிக் காட்டட்டும் பிறகு தமிழகத்தை பற்றி பேசுவதை பார்க்கலாம். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையேழுத்திட நேரமில்லை சூதாட்டம் நடத்தும் முதலாளிகளை  வைத்து கொண்டு பேசும் போக்கு சந்தி சிரிக்கிற நேரத்தில் ஆளுநர் தனது வாயை அடக்கி கொண்டு இருந்தால் மரியாதையாக இருக்கும்.

அண்ணாமலை இப்போது பார்பனர்களின் கட்சியில் இருப்பதால்  அவர்களைப்போல அண்ணாமலைக்கும் ஆணவம் வந்து விட்டது. அதனால் தான் இப்படி  ஆணவமாக பேசி வருகிறார். அண்ணாமலை இன்னும் காவல்துறை அதிகாரி மனநிலையிலிருந்து, அரசியல் கட்சியின் தலைவர் என்ற  மனநிலைக்கு வரவில்லை என்பது அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது. அவருக்கு விரைவில் அரசியல் அறிவு வரவேண்டும் என்பதே எங்களுக்கு விருப்பம். 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

2016ம் ஆண்டில்  காபிடே உரிமையாளர் சித்தார்த் ரபேல் வகை கடிகாரத்தை வாங்கியுள்ளார். அவரிடமிருந்து அன்றைய ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அந்த ரபேல் வகை கடிகாரத்தை வாங்கியுள்ளது இலஞ்ச கணக்கில் தான் வரும். அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறும் அண்ணாமலை ரபேல் கைகடிகாரம் பெற்ற இலஞ்ச ஊழல் கணக்கிற்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!