
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை தெதாடங்கியதுமே எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சியினர் முழக்கமிட்டதால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.
2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளானத்தில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குதே வழக்கம். அதன்படி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கு வணக்கம் எனக் கூறி தமிழில் உரையை தொடங்கினார். அப்போது, அவரை பேசவிடாமல் திமுக கூட்டணி கட்சிகள் முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மறுபுறம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர். அப்படி இருந்த போதிலும் தனது உரையை நிறுத்தாமல் தொடர்ந்தார்.
ஆளுநர் உரை விவரம்:-
* போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
* கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது.
* பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 2.19 குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக முதல்வருக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
* பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு தமிழ்நாடு அரசு உதவியதற்கு ஆளுநர் பாராட்டினார்.
* பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
* விற்பனை விலை பாதிக்காமல் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி உள்ளது.
* தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டுப்போட்டிகள் நடக்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்
* பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு முதலமைச்சருக்கு பாராட்டு
* மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது
* நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.
* மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது
* இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன
* பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
* மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது.
* குறுகிய காலத்தில், செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது தமிழக அரசு
* 2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு
* சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது
* பருவமழையையும், புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்
* பெண்களின் முன்னேற்றத்திற்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
* மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது"
* 42,845 சுய உதவிக்குழுக்கள் நடப்பாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
* கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது