தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! ஆளுநருக்கு எதிராக கோஷம்..! அதிர்ச்சி அளித்த திமுக கூட்டணி கட்சிகள்

By Ajmal Khan  |  First Published Jan 9, 2023, 10:06 AM IST

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கியதும், அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.


ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் நாள் தோறும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதாக புகார் கூறப்பட்டது. திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறியது விமர்சிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. மேலும் தமிழநாட்டை தமிழகம் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

Latest Videos

ஆளுநர் உரை புறக்கணிப்பு

இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழந்த வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சட்ட பேரவையின் இன்றைய கூட்டத்தை  திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கியதும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்யும் வகையில் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து ஆளுநர் இருக்கையை முற்றுகையிட்டு தமிழ்நாடு எங்கள் நாடு என முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படியுங்கள்

நான் பாஜகவில் சேரவே இல்லை.. பிறகு எப்படி விலக முடியும்? மீடியாவுக்கு எதிராக கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

 

click me!