பொங்கலுக்கு வெளியாகும் முக்கிய நடிகர்கள் படங்களின் டிக்கெட்டுகள் விலை ரூ. 3000? மாஃபியா உதயநிதி! விளாசும் BJP

Published : Jan 09, 2023, 07:29 AM ISTUpdated : Jan 09, 2023, 08:38 AM IST
பொங்கலுக்கு வெளியாகும் முக்கிய நடிகர்கள் படங்களின் டிக்கெட்டுகள் விலை ரூ. 3000?  மாஃபியா உதயநிதி! விளாசும் BJP

சுருக்கம்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  நிறுவனமே,  இந்த படங்களின்  விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது. 

பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் 'சூது' இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள படங்களின்  டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய் 1000 முதல் ரூபாய் 3000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் 'சூது' இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதையும் படிங்க;- ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு,  திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.  ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை  நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை  திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  நிறுவனமே,  இந்த படங்களின்  விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது. பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம்,  இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில திமுக அரசை கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  ரெட் ஜெயண்ட் பேர் சொல்ல பயமா? எங்க போச்சு சரக்கு! முறுக்கு! மிடுக்கு! தமிழக பாஜக அதிரடி !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!