நான் பாஜகவில் சேரவே இல்லை.. பிறகு எப்படி விலக முடியும்? மீடியாவுக்கு எதிராக கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

Published : Jan 09, 2023, 06:47 AM IST
நான் பாஜகவில் சேரவே இல்லை.. பிறகு எப்படி விலக முடியும்? மீடியாவுக்கு எதிராக கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.!

சுருக்கம்

நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நான் பாஜகவில் சேரவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

நான் பாஜகவில் இணையவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும்? என கேள்வி எழுப்பி பத்திரிகைகளின் தரம் குறித்தும் காட்டமாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். 

தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி  கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6  மாதம் நீக்கப்பட்டுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். 

இதனையடுத்து, காயத்ரி ரகுராம் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். இந்நிலையில், ஜனவரி 3ம் தேதி அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கூறி கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக  காயத்ரி ரகுராம் அறிவித்தார். இந்நிலையில், நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நான் பாஜகவில் சேரவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நான் பாஜகவில் சேரவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும். இதுதான் தற்போதைய பத்திரிகைகளின் தரம். நான் கூறிய தகவலை தவறாக பதிவிட்டுள்ளார்கள். இந்த விவாதத்தில் அண்ணாமலை கூறியது சரியே. தங்களுக்கான ஒழுக்கங்களை வளர்த்து கொள்ளாமல் பிறரை கேள்வி கேட்க எந்த தகுதியும் ஊடகங்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!