எங்களை மீறி அரசியல் செய்துவிட முடியுமா..?விரக்தியின் உச்சத்தில் மிரட்டும் டி.டி.வி.தினகரன்..!

Published : Feb 17, 2021, 03:32 PM IST
எங்களை மீறி அரசியல் செய்துவிட முடியுமா..?விரக்தியின் உச்சத்தில் மிரட்டும் டி.டி.வி.தினகரன்..!

சுருக்கம்

சசிகலா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், டி.டி.வி.தினகரனின் இந்தப்பேச்சு மிரட்டுவதைப்போல உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’திமுகதான் எங்களுக்கு அரசியல் எதிரி. அந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் அமமுக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமையாது. ஜெயலலிதா ஆட்சிதான் அமையும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சசிகலா ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வுக்கு பிறகு அனைத்திற்கும் அவர் பதில் சொல்வார். எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது. சசிகலா வெளியில் வந்தால் மாற்றம் வரும் என யாரும் சொல்லவில்லை, ஊடகங்கள் தான் தெரிவித்தது.  மருத்துவர்கள் சசிகலாவை ஓய்வு எடுக்கச் சொன்னதால் அவர்கள் ஓய்வு முடிந்த பிறகு வெளியே வருவார்”என அவர் தெரிவித்துள்ளார்.

சசிகலா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், டி.டி.வி.தினகரனின் இந்தப்பேச்சு மிரட்டுவதைப்போல உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!