பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் குழப்பமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

By vinoth kumarFirst Published Feb 17, 2021, 2:13 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறிய நிலையில் இன்று திடீரென பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்;- சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டது. இதில் எந்த குழப்பமும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு அட்டவணை அறிவிப்போம்.

தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்கள் விளையாட்டில் கலந்து கொள்ள எந்த நிபந்தனையும் இல்லை. மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் ரூ.35 கோடி கேட்டு உள்ளோம். 

மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை. நூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆட்கள் மூலம் நிரப்பப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

click me!