தினகரன் யாருக்கும் பயந்து ஒதுங்கி செல்கிற ஆள் இல்லை... மீண்டும் பழைய ஃபார்முக்கு வரும் டிடிவி..!

By vinoth kumarFirst Published Feb 17, 2021, 3:16 PM IST
Highlights

தேர்தலில் அமமுக ஓட்டுக்களை பிரித்தால். நாம் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். அது நடக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

தேர்தலில் அமமுக ஓட்டுக்களை பிரித்தால். நாம் வெற்றி பெற்று விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர். அது நடக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

நாமக்கல்லில் நடைபெற்ற அமமுக நிர்வாகி அன்பழகன் இல்ல திருமண விழாவில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். பின்னர், விழா மேடையில் பேசிய அவர்;- திமுகவின் B டீமாக சில அமைச்சர்களே செயல்பட்டு வருகிறார்கள். நான்காண்டுகளாக திமுககூட எங்களுக்கு தொல்லை தரவில்ல. தினகரன் தான் எங்களுக்கு தொல்லை தந்தார் என அமைச்சர் ஒ.எஸ். மணியன் சொல்வதில் இருந்தே, அதிமுக- திமுகவின் 60-40% கூட்டணி தெளிவாகிறது.

தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைக்க உறுதியேற்போம். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தீய சக்தி என அழைக்கப்பட்ட திமுக ஆட்சிக்கு வரவிடக்கூடாது. அவ்வாறு வராவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் மட்டுமே அமமுகவினர் உள்ளதாக அமைச்சர்கள் சிலர் தெரிவித்தனர். ஆனால் சசிகலா விடுதலையாகி வெளியே வந்த போது தமிழகம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் திரண்டு வந்தனர். 

சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பினர். அதுமட்டுமின்றி சசிகலா வருது வருகைக்காக ரூ.192 கோடி, 200 கோடி செலவழித்ததாகப் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பினர். ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் உள்ளதால் அவ்வாறு பேசி வருகின்றனர். ஆர்.கே. நகர் வெற்றி போல் போல் தமிழகம் முழுவதும் அமமுக வெற்றி பெறும். பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளுக்குப் பின் அமமுக எழுச்சி பெறும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். திமுகவின் பொய்யான வழக்குகளால் சசிகலா சிறை சென்று வந்தார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவர்.

கொரோனா பரவல் காரணமாகவே சில காலம் ஒதுங்கி இருந்தேன். அதற்குள் தினகரன் பயந்துவிட்டார் எனக் கூறினர். நான் யாருக்கும் பயந்தவன் அல்ல. சட்டப்பேரவைத் தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

click me!