தொடங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி வேட்புமனு தாக்கல்..! பதுங்கும் அதிமுக..! பாயும் திமுக

By Ajmal KhanFirst Published Jan 31, 2023, 9:57 AM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய நிலையில், அதிமுக சார்பாக வேட்பாளர் பெயர் அறிவிக்காமல் பதுங்கும் நிலையில் உள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். அவர் இறந்து இரண்டு வார காலங்களுக்குள் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு, பிப்ரவரி 8 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, பிப்ரவரி 10 ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெறுதலுக்கான கடைசி நாள். வாக்குப்பதிவு 27 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

அமித்ஷாவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி..! ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த அண்ணாமலை

அதிமுகவில் தொடரும் குழப்பம்

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்காட வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியுள்ளது. மாலை 3 மணி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். இந்த நிலையில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் இந்த தேர்தலில் களம் காணுகிறது. வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரச்சாரமானது தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தையும் திமுகவினர் நடத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவிலோ பல வித குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக உள்ளது. இதில் 3 தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த உள்ளனர். அமமுக சார்பாக டிடிவி தினகரன் ஏற்கனவே வேட்பாளரை அறிவித்து விட்டார். 

பாயுமா.? பதுங்குமா.?

ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவைரை இன்று பாஜக தனது ஆலோசனை கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளரை அறிவிக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணியோ இரட்டை இலை சினத்திற்காக காத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வருகிற வெள்ளிக்கிழமை முடிவு தெரியும் என்பதால் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. ஆனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணி சார்பாக 100க்கும் மேற்பட்டவர்களை ஈரோடு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. எனவே இந்த ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவிக்காமல் பதுங்கும் அதிமுக வரும் நாட்களில் பாயுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்

ஜெயலலிதாவின் பொருளை ஏலம் விடுவதை போல் தமிழகத்தில் அதிமுகவை ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின் கிண்டல்
 

click me!