ஆவேச உரை தயார் - தொண்டர்களிடையே இன்று பேசுகிறார் சசிகலா

First Published Dec 31, 2016, 1:41 AM IST
Highlights


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா இன்று மதியம் பதவி ஏற்கிறார் . பின்னர் தொண்டர்களிடையே அவர் உரையாற்ற உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா டிச.5 அன்று மறைந்தார்.அதன் பின்னர் கட்சிக்கு யார் தலைமை என்பது குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

ஆனால் எதிர்ப்பு காண்பிப்பார்கள் என்று சந்தேகித்த பி.எச்.பாண்டியன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி , தம்பி துரை உள்ளிட்டோரும் மோடியின் ஆள் என்று கூறப்பட்ட ஓபிஎஸ்சும் பொதுச்செயலாளராக கட்சியை வழி நடத்த சசிகலா வரவேண்டும் என ஒரு மனதாக கூறினர்.

 பொதுக்குழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலா தான் பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நூறு சதவிகித ஆதரவுடன் சசிகலா பொதுச்செயலாளர் ஆகிறார். நேற்று தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்ற சசிகலா அஞ்சலி செலுத்தினார். 

இன்று பொதுச்செயலாளராக சசிகலா முறைப்படி பொறுப்பேற்க உள்ளார். ராயபேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் மதியம் சரியாக 12.20 க்கு அவர் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் சசிகலாவுக்கு வழி நெடுக தொண்டர்கள் வரவேற்பளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்ச்சியில் முதல்வர் ஓபிஎஸ், அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் , எம்.எல்.ஏக்கள் , எம்பிக்கள் கலந்துகொள்கின்றனர். பின்னர் சசிகலா முதன் முறையாக பொதுமக்கள் முன்பு உரையாற்ற உள்ளார். 

அவரது உரையில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் , தொண்டர்களுக்கு வேண்டுகோளும் இருக்கும் என தெரிகிறது.  

click me!