கேலி கூத்தா இல்ல இருக்கு.. அணில் மேல் பழிபோட்டு தப்பிக்க கூடாது.. செந்தில் பாலாஜியை விளாசிய எடப்பாடி பழனிசாமி

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 3:04 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திமுக அரசிடம் சரியான திட்டமிடுதல் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிக்கேற்றவாறு டோக்கன் வழங்க வேண்டும். 

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திமுக அரசிடம் சரியான திட்டமிடுதல் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறைக்கு மின்சாரம் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அதிக விலை சொல்லப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொண்டதால் மின்துறைக்கு சுமார் ரூ.14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மையால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. மின்வெட்டு குறித்து எரிய பதில் அளிக்கவில்லை. நாட்டில் விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் மின்வெட்டுக்கு அணில் மீது பழிபோடுவது ஏற்க முடியாது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திமுக அரசிடம் சரியான திட்டமிடுதல் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தமிழகத்தில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிக்கேற்றவாறு டோக்கன் வழங்க வேண்டும். அதிகளவில் மக்கள் வரும் நிலையில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போடப்படுகிறது.

திமுக தேர்தல் நேரத்தில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு சிலவற்றை மட்டும் நிறைவேற்றுவதாக அறிவித்து உள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் விலை குறைப்பு நடைபெறவில்லை. இது பெரும் ஏமாற்றம். கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர். விலையை கட்டுப்பாட்டில் வைத்திட வேண்டும். சிமென்ட் விலை உயர்ந்து கொண்டே உள்ளது.அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் கொடுக்கப்பட்டது. இதனை கூடுதலாக வழங்கிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

click me!