மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகைதந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. மாநில அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா அறிவிக்கப்பட்டதை கண்டித்து பட்டமளிப்புவிழாவை
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகைதந்த ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. மாநில அரசை ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா அறிவிக்கப்பட்டதை கண்டித்து பட்டமளிப்புவிழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில் இந்த போராட்டம் நடந்துள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது முதல் மாநில அரசுக்கும்-ஆளுநருக்கும் இடையேயான மோதல் கடுமையாக இருந்து வருகிறது. மாநில அரசு அனுப்பி வைக்கும் ஆவணங்கள் மற்றும் மசோதாக்களில் ஆளுநர் கையொப்பம் விடாமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து தமிழக அரசு முன்வைத்து வருகிறது. நீட் விலக்கு மசோதாவில் ஆளுநர் காலம் தாழ்த்தியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது ஒருபுறமுள்ள நிலைகள் தொடர்ந்து ஆளுநர் பல்கலை கழக விவகாரங்களில் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பு... என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில்தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை மாநில அமைச்சரிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஆளுநர் அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.அதேவேளையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் இந்த செயலை கண்டித்து வருகின்றனர், ஆனாலும் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ஏன்? ரணில் விக்கிரமசிங்க விளக்கம்!!
ஆனாலும் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பொன்முடி கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் முதன்முறையாக ஆளுநர் அலுவலகத்தில் உத்தரவின்படி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முருகன் இன்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
ஏற்கனவே பல்கலைக்கழகங்களின் அதிகாரம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், ஆளுநர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தன்னிச்சையாக நடந்து கொண்டது சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
இதேபோல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒன்றில் மத்திய இணை அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருப்பது இதுவரை இல்லாத நடைமுறையாகும். இந்நிலையில்தான் ஆளுநர் பல்கலைக்கழக விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியில் சமூகநீதி மாணவர் இயக்கம், தமுமுக மற்றும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்டோர் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மதுரையில் பல்வேறு அமைப்பினர் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதேபோல் வெடிகுண்டு பரிசோதனை நிபுணர்கள் முன்கூட்டியே வந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். கடுமையான சோதனைக்கு பின்னரே மாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுப்ட்ட சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந 17பேரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர்.