பாஜக முக்கிய புள்ளி நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. பயங்கர அதிரிச்சியில் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 10:32 AM IST
Highlights

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவர் வந்த அவரது உறவினர்கள் கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கையில் பாஜக மீனவர் அணி  துணைத்தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளது. மதுரை முக்கு நெல்மணி தெருவில் வசித்து வருபவர் முத்துப்பாண்டி இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது, இந்நிலையில் இவர் நேற்றுதான் பாஜக மீனவர் அணி துணைத் தலைவராக பொறுப்பேற்றார் நேற்று அவரைதேடி அவரது வீட்டிற்கு  இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவர் வீட்டில் இல்லாததால் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்டவற்றை சரமாரியாக அடித்து உதைத்தது. 

பின்னர் அவரை தேடி சென்ற கும்பலுக்கு, அவர் வீட்டுக்கு அருகில் உள்ள டீக்கடையில் இருப்பதாக தகவல் கிடைத்தது, பின்னர் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் அவரை நோக்கி  சென்றது. அப்போது முத்துப்பாண்டி டீ கடையில் இருந்ததை பார்த்த அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அப்போது அவர் சுதாரித்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றார், ஆனாலும் விடாது துரத்திய அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. அதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கினார். அவர் உயிரிழந்து விட்டதாக எண்ணி அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தலைமறைவானது. அருகில் இருந்தவர்கள் மீட்டு முத்துப்பாண்டியை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவர் வந்த அவரது உறவினர்கள் கொலைக்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அவர்கள் சமாதானமாகினர். உயிரிழந்த முத்துப்பாண்டி உடல் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முத்துப்பாண்டியை கொலை செய்த கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொடூர கொலை சம்பவம் பாஜக மற்றும் அந்த கட்சியின் மாநில தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

click me!