அய்யய்யோ தமிழக மக்களே.. பயங்கர ஆபத்து.. அக்டோபரில் அடித்து தூக்கபோகுதாம்.. அலறும் சுகாதாரத்துறை செயலாளர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 9:48 AM IST
Highlights

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து அவர் கூறியதாவது, இன்றைய தேதியிலும்கூட ஐசியூவில் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பன்மடங்கு அதிகரிக்ககூடும் என்பதால் மக்கள் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். நாட்டை முதல் அலை, இரண்டாவது அலை என இரண்டு அலைகள் தாக்கியுள்ள நிலையில் ஏராளமான உயிர்கள் பறிகொடுக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரமும் கொரோனா பேரிடர் காரணமாக அதளபாதாளத்தில் சரிந்துள்ளது. ஆனாலும் இன்னும் கொரோனா கொடூரம் ஓயவில்லை. 

இந்த ஆண்டின் இறுதியில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என ஐ.சி.எம்.ஆர் மற்றும் பல்வேறு நோய் தோற்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது மெல்ல உயரத் தொடங்கி இருக்கிறது, குறிப்பாக 1500- 1600 என்ற எண்ணிக்கையில் நோய்த்தொற்று பதிவாக்கி வந்தாலும், கொரோனா விதிமுறைகள் ஆங்காங்கே காற்றில் பறக்கவிடப்படும் அவலம் இருந்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டு வருவதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் நோய்த்தொற்று பன்மடங்கு அதிகரிக்க கூடும் என்பதால், மக்கள் கொரோனா விதிகளை பின்பற்றி வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து அவர் கூறியதாவது, இன்றைய தேதியிலும்கூட ஐசியூவில் சில நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களே இதுபோன்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது வைரஸ் தொற்று கட்டுக்குள் இருந்தாலும்கூட கொரோனாவை பொறுத்தவரையில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போது இருக்கிற நோய்த்தொற்று எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. ஆனால் அக்டோபர் மாதத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே இந்த நேரத்தில் பொதுமக்கள் அரசுக்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!