"திராவிட மாடல் ஆட்சியில் 1 ஆண்டு கூட முடியல.. அதுக்குள்ள நாக்கு தள்ளுது.!" தெறிக்கவிட்ட அண்ணாமலை

By Raghupati RFirst Published Jun 4, 2022, 12:08 PM IST
Highlights

சென்னையில் மட்டும் 19 நாள்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளன, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு எடுத்துக்காட்டாகும். பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் தான் என்னால் மேடையில் தைரியமாகப் பேசமுடிகிறது. 

தாராபுரத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ‘பாஜக ஒரே நாடு ஒரே சட்டம் என்கிற கொள்கையைக் கொண்டுள்ளது. ஆனால் ஒரே நாடு, ஒரே குடும்பம் என்ற திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவினர் ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். திமுக முரண்பாடுகளைக் கொண்ட கட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் 5. 5 கோடி கழிப்பிடங்கள்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக 56 லட்சம் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மட்டும் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் தமிழகத்தை விட 8 மடங்கு அந்நிய முதலீடு வந்துள்ளது. தமிழகத்தில் தொழில்தொடங்க வரும் அந்நிய முதலீட்டாளர்களிடம் 30, 40 சதவீத கமிஷன் தொகையைக் கேட்கின்றனர்.

இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !

இதன் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதல்வர் தெரிவித்ததுடன், அண்ணாமலை அரசியல் செய்வதாகத் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 நாள்களில் 21 கொலைகள் நிகழ்ந்துள்ளன, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதற்கு எடுத்துக்காட்டாகும். பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளில் செய்த சாதனைகளால் தான் என்னால் மேடையில் தைரியமாகப் பேசமுடிகிறது. 

இந்த 8 ஆண்டுகளில் பாஜகவின் ஒரு துறை அமைச்சரின் மீது அலுவலக குண்டூசி திருடியதாகக்கூட புகார் தெரிவிக்க முடியவில்லை. அதே வேளையில், திராவிட மாடல் ஆட்சியில் ஒரு ஆண்டுகூட முடியாத நிலையில் தற்போது நாக்கு தள்ளுகிறது. ஆகவே, பாஜக தலைவர்கள் திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதான ஊழல் பட்டியல், ஊழல் புகார்கள், ஊழல் ஆதாரங்களை ஜூன் 5 ஆம் தேதி காலையில் மதுரையில் இருந்து வெளியிடத் தொடங்குவார்கள்’ என்று பேசினார்.

இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !

click me!