திமுகவை விடுங்க.. விவசாயிகள் நலனுக்காக உழைக்கும் கட்சி பாஜக மட்டும் தான் - அண்ணாமலை

By Raghupati R  |  First Published Jun 11, 2023, 12:24 AM IST

தேயிலைத் தோட்ட நிலங்களை, வனத்துறைக்குக் கொடுக்க திமுக அரசு முடிவெடுத்ததை எதிர்த்து, தேயிலை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை சாகுபடி செய்யும் விவசாயிகள், இன்று, மாலை மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் திரு தும்பூர்.ஐ.போஜன், நெலிகோலு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு.தர்மன், தேயிலை சிறு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் திரு. ஜி. ராஜு ஆகியோருடன், தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்தித்தனர்.

பாஜக மாநில பொதுச் செயலாளர் திரு ஏ.பி.முருகானந்தம், பாஜக நீலகிரி மாவட்ட தலைவர் திரு.மோகன்ராஜ், மற்றும் நீலகிரி மாவட்ட தொண்டர்கள்ஆகியோரும் உடனிருந்தனர்.  மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களது தலைமையிலான மத்திய அரசு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எப்போதுமே துணையாக இருந்து வருகிறது. குறிப்பாக, தேயிலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக, தேயிலை வாரியம் மூலம் மத்திய அரசு 352 சுய உதவிக் குழுக்கள், 440 விவசாய உற்பத்தி குழுக்கள், 17 விவசாய உற்பத்தி நிறுவனங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும், தேயிலை சாகுபடிக்கான இயந்திரங்கள் வாங்க நிதி உதவியும், உயர்தர தேயிலை சாகுபடி குறித்த கருத்தரங்குகளும், தொடர்ந்து நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாது, நாடு முழுவதும் சிறு சிறு தேயிலை சாகுபடி நிறுவனங்கள் அமைக்க ஊக்குவிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு தேயிலை சாகுபடி தொடர்பான வேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியைப் பெருக்கவும், மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

கிலோவுக்கு ரூபாய் 3.60 இருந்த ஏற்றுமதிக்கான வரி நிவாரணம், தற்போது கிட்டத்தட்ட இரு மடங்காக கிலோவுக்கு ரூபாய் 6.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேயிலை ஏற்றுமதியாளர்கள் பலன் பெறுவர். சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் குழந்தைகளுக்கு, கல்விக்கான நிதி உதவியும், மத்திய அரசின் சிறப்புத் திட்டங்கள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. 2022 - 2023 ஜனவரி மாதம் வரை, இந்தத் திட்டத்தின் கீழ் 2845 குழந்தைகளின் கல்விக்காக ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..சென்னை வந்த அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக.. மின் இணைப்பு துண்டிப்பால் கடுப்பான பாஜகவினர்

3.25 கோடி ரூபாய் நீலகிரி மாவட்டத்தில், தேயிலைத் தோட்ட நிலங்களை, வனத்துறைக்குக் கொடுக்க திமுக அரசு முடிவெடுத்ததை எதிர்த்து, தேயிலை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது. பாஜகவைப் பொறுத்தவரை எப்போதும் விவசாயிகள் நலனுக்காக உழைக்கும் கட்சியாகவே இருந்து வருகிறது.

விவசாயிகள் நலனுக்காகப் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதும், விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பதும் பாஜக மட்டும்தான். தமிழகத்தில், நீண்டகாலமாக தீர்க்கப்படாத தேயிலை விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணவும், தேயிலை சாகுபடி செய்யும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அனைவருக்கும். பாதுகாப்பையும், ஆதரவையும், தமிழக பாஜக தொடர்ந்து வழங்கும்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க..தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

click me!