தொண்டர்களை சந்தித்த அமித்ஷா! மின் இணைப்பு துண்டிப்பு! பொங்கிய பாஜகவினர் - மின் வாரியம் விளக்கம்

By Raghupati R  |  First Published Jun 10, 2023, 11:22 PM IST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.


தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் ஜூன் 8 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அமித்ஷாவின் பயண தேதி மாற்றப்பட்டு, அவர் நாளை (ஜூன் 11) தமிழகம் வருவதாக இருந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வந்த அமித்ஷா, கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். பின்னர் சாலையில் இருந்து இறங்கி தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார். முன்னதாக விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வெளியே வரும்போது திடீரென மின்தடை ஏற்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..சென்னை வந்த அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக.. மின் இணைப்பு துண்டிப்பால் கடுப்பான பாஜகவினர்

இதனை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மின் இணைப்பு துண்டிப்பு தொடர்பாக மின் வாரியம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மின்சார கேபிள் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்து உள்ளது.

"சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள்"

மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், அமைச்சர் வரும் பொழுது மின்தடை ஏற்பட்டதால் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...!! pic.twitter.com/cXVkSusJNq

— Thamaraikani (@kani_twitz24)

இதையும் படிங்க..தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

click me!