மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் ஜூன் 8 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது.அமித்ஷாவின் பயண தேதி மாற்றப்பட்டு, அவர் நாளை (ஜூன் 11) தமிழகம் வருவதாக இருந்தது. தற்போது, மீண்டும் தேதி மாற்றப்பட்டது.
இதையும் படிங்க..தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் 9.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து வரவேற்றனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியில் வந்தவுடன், அந்த பகுதியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பாஜக தொண்டர்கள் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தொண்டர்கள் சாலை மறியல் திமுக அரசின் அராஜகம்
சென்னை விமான நிலையம்
சென்னை அமித்ஷா ஜி வருகையின் போது மின் தடை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து பாஜக தொண்டர்கள் சாலை மறியல் | | | pic.twitter.com/4l95YMZtTy
இதையும் படிங்க..தமிழகத்தை சேர்ந்த 25 பேர்.. தேர்வு செய்த தமிழக பாஜக.! அமித்ஷாவுடன் திடீர் மீட்டிங் - முழு பின்னணி