மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் 24 தமிழக பிரபலங்கள் - யார் யார் தெரியுமா?

By Raghupati R  |  First Published Jun 10, 2023, 11:48 PM IST

தமிழகத்தை சேர்ந்த தொழில், கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவையில் சாதித்த 24 பிரபலங்களுடன் இரவு உணவு அருந்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இந்த நிலையில் அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி உள்ளது. அந்த வகையில் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் தென்னிந்திய மாநிலங்களை அக்கட்சித் தலைவர்கள் குறிவைக்கத் தொடங்கி உள்ளார்கள்.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரு மாநிலத்தையும் பறிகொடுத்தது. இமாச்சல், கர்நாடகா என அடுத்தடுத்து கட்சி 2 மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இப்போதே அக்கட்சி தொடங்கி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..சென்னை வந்த அமித்ஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த திமுக.. மின் இணைப்பு துண்டிப்பால் கடுப்பான பாஜகவினர்

அந்த வகையில்தான் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார். அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா உள்ளிட்டோர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அமித்ஷாவை பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஆற்காடு நவாப் முகம்மது அலி ஆகியோர் சந்திக்க உள்ளனர்.

தொடர்ந்து இப்பட்டியலில், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, சீனிவாசன், பி.ஆர்.ராஜன், பிருந்தா ரெட்டி உள்ளிட்ட 24 முக்கிய பிரபலங்கள், திரைப்பிரபலங்கள் சந்தித்து பேசுகிறார்கள்.

பிறகு பாஜக நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா, நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது மற்றும் கூட்டணி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகிறார் என்று தமிழக பாஜக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..தமிழ்நாட்டுக்கு பாஜக என்ன செஞ்சது.? லிஸ்ட் போட்டு பார்க்கலாமா.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்

click me!