ஆப்ரேஷன் கஞ்சா.! தைரியம் இருந்தா இதை பண்ணுங்க? திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை

Published : Jun 27, 2022, 01:53 PM IST
ஆப்ரேஷன் கஞ்சா.! தைரியம் இருந்தா இதை பண்ணுங்க? திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை

சுருக்கம்

Annamalai : பிரதமர், ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், 'ஆப்ரேஷன் கஞ்சா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

அண்ணாமலை பேச்சு

தமிழக பாஜக சார்பில், கீழ்ப்பாக்கத்தில்  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டு உள்ளார். இது, பாஜகவின் சிறப்பான சமூக நீதிக் கொள்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூட திரௌவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த வகையில் திருமாவளவன் போன்றவர்கள், கண்ணாடி முன் நின்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழக மக்களை, திமுக அரசு குழப்பி வருகிறது. 

இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?

திமுக Vs பாஜக

ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.  சமூக நீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம் இருக்கிறதா ? தனிமனிதனுக்கு சுய மரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்ற பின் சாதனை நாடாக மாற்றி காட்டியவர் நரேந்திர மோடி.

திமுகவை பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வரவேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. பிரதமர், ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், 'ஆப்ரேஷன் கஞ்சா' என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது’ என்று பேசினார்.

இதையும் படிங்க : தேமுதிக தலைவர் ஆகிறாரா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ? வெளியான அதிர்ச்சி தகவல் !

இதையும் படிங்க : AIADMK : ஒற்றை தலைமைக்கு 'ஓகே' சொன்ன சசிகலா.. அடுத்து எடப்பாடியா? பன்னீரா? உச்சகட்ட பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!