சிவசேனா தலைவரும் அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது அவரது ஆதரவாளர் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனா தலைவரும் அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது அவரது ஆதரவாளர் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மகாராஷ்டிர அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது இந்நிலையில், சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.2014ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து சிவசேனா தேர்தலை எதிர் கொண்டது. அதில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையும் படியுங்கள்: எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!
சிவசேனா தலைமையில் மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி இருந்து வருகிறது. இந்நிலையில் அக்காட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் தனியார் ஓட்டலில் முகாமிட்டுள்ளார். இது சிவசேனா ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது. தனக்கு மகாராஷ்டிராவில் இதுவரை 50 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதில் 40 பேர் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை 288 ஆகும், அதில் 50 பேர் தனது ஆதரவாளர்களாக உள்ளனர் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மகாராசா வைப் பொருத்த வரையில் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும், எனவே சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 53, காங்கிரஸ் 44 எம்எல்ஏக்கள் என கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சிவசேனா கட்சியிலிருந்து 40 எம்எல்ஏக்களை உருவி தனது ஆதரவு பலத்தை ஏக்நாத் ஷிண்டே உருவாக்கி இருப்பதால் சிவசேனாவின் ஆட்சி கலையும் நிலையில் உள்ளது. இப்படி நெருக்கடியான நிலையில் சிவசேனா கட்சிக்கு உறுதுணையாகவும் உத்தவ் தாக்கரேவுக்கு துணையாகவும் இருக்கு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படியுங்கள்: மகளை கடத்திய நித்யானந்தா.. போலீசில் தந்தை கொடுத்த 'பகீர்' புகார் - ஆசிரமத்தில் அதிரடி ரெய்டு!
கட்சியில் இருந்து விலகி பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள் உடனே மும்பை திரும்ப வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் எம்எல்ஏக்களை ஒற்றுமை படுத்தும் முயற்சியில் ராவத் ஈடுபட்டுள்ளார. இத்தருணத்தில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.