திமுக சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி கேட்க பத்திரிக்கையாளர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது எனது தொடர்பான செய்தியை போடுங்கள் என உங்களிடம் நான் கெஞ்சவில்லை. நீங்க ஒரு இன்டர் மீடியன் என கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலும் அண்ணாமலையும்
தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே நட்பு சார்ந்த உறவு இருக்கும், அந்த வகையில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலாளர வைகோ, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பத்திரிக்கையாளர்களுடன் மரியாதையோடு நட்பை தொடருவார்கள். இந்தநிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து பத்திரிக்கையாளர்களுடன் மோதல் போக்கை கடுமையாக மேற்கொண்டு வருகிறார். மிகவும் மோசமாக விமர்சித்தும் கருத்துகளையும் கூறி வருகிறார். கடலூரில் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்ப முயன்ற பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்குகள் போல் ஏன் தாவித்தாவி வருகிறீர்கள் என்றும் ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா என்றும் அண்ணாமலை தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
குரங்கு- பத்திரிக்கையாளர்
இதே போல சென்னை கமலாலயத்தில் பத்திரிக்கையார்களை பார்த்து அறிவாலயத்தில் பணம் வாங்கிட்டு கேள்வி கேக்குறீங்க.. ஏலம் விடுவது போல் 100 ரூபாய் வாங்கிக்கோங்க, 200 ருபாய் வாங்கிக்கோங்க என பேசி கடும் கண்டனத்திற்கு உள்ளானார். இதே போல கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு யாராக இருந்தாலும் சேனல் பெயரையும் செய்தியாளர் பெயரையும் கூறி விட்டு கேள்வி கேளுங்கள் என்று அவர் கறாராக கூறினார். யூடியூப் சேனல் செய்தியாளர்கள் யாரும் என்னுடைய செய்தியாளர்கள் சந்திப்புக்கு வரவேண்டாம் என்றும் அவர்களை அலுவலகத்திற்குள் விட வேண்டாம் என்றும் அண்ணாமலை அப்போது தெரிவித்தார். மேலும் 40 ஆயிரம் ரூபாய் கேமரா, மொபைல் போன் வைத்துக்கொண்டு லைக் வாங்குவதற்காக யூடியூப் சேனல்காரர்கள் கேள்வி கேட்கிறீர்கள்.
நீங்க ஒரு இன்டர் மீடியன்
என் பெயர் அண்ணாமல் நான் பாஜக, அதே மாதிரி என்னிடம் கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் பத்திரிக்கையாளர் என சொல்ல கூடாது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கண்டனங்களும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்தநிலையில் மீண்டும் பத்திரிக்கையாளர்களை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஊழல் பட்டியல் தொடர்பாக அண்ணாமலையிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது நீங்க ஜட்ஜ் கிடையாது. நீங்க ஒரு இன்டர் மீடியன், நான் சொல்வது பிடித்திருந்தால் உங்க ஆடியன்ஸக்கு போடுங்கள்.
செய்தி போடுங்கனு கெஞ்சவில்லை
பிடித்திருந்தால் பார்ப்பார்கள். நீங்கள் ஒன்றும் குவாலிபைடு ஆடிட்டரோ, குவாலிபைடு சார்ட்டட் அக்கவுண்டு இல்லையெனு தெரிவித்தார். மேலும் நியூஸ் போடாலாமா வேண்டாமா என எடிட்டர் முடிவு பன்னுவாரு, நீங்க சார்ட்டர் அக்கவுண்டோ லாயரோ இல்லை. நீங்க ஒரு பத்திரிக்கையாளர். பிடிக்கலைனா செய்தி போடாதீங்க.. உங்க கை காலில் விழுந்தேனா.. உங்க எடிட்டரோடு டீ சாப்பிட்டேனா.உங்க ஆபிஸ்க்கு வந்தேனா.? டிவியில் போடுங்கனு சொன்னேனா..? எனது கருத்து ஏற்கவில்லைனா போடாதீங்க எப்பாவாது வந்து கெஞ்சி கேட்டேனா.? என அண்ணாமலை ஆவசேமாக பேசினார். இந்த பேச்சு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்