பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், இல்லைனா நாங்களும் பேசுவோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமர்பிரசாத் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக- பாஜக மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அதிகார மோதல்களால் பல பிரிவாக பிரிந்துள்ளது. இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இந்தநிலையில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கூட்டணிக்குள் தொடர்ந்து மோதலும் ஏற்பட்டு வருகிறது. பாஜகவினர் அதிமுகவினரையும், அதிமுகவினர் பாஜகவினரையும் சாடி வருகின்றனர். அண்ணாமலையோ அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமரசம் செய்த அமித்ஷா
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை முதிர்ச்சியற்று செயல்படுகிறார். தன்னையே முன்னிலைப்படுத்த வேண்டும் என பேசி வருவதாகவும் எனவே அவரைப்பற்றி எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என கூறியிருந்தார். இதனையடுத்து இரு தரப்பையும் டெல்லிக்கு அழைத்து அமித்ஷா சமரசம் பேசினார். இருந்த போதும் அதிமுக -பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.கவினரின் விமர்சனங்களுக்கு அதிமுகவினருக்கும் பதிலடி கொடுக்க தெரியும். வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம். இது போன்ற விமர்சனங்கள் பா ஜ கவினர் அண்ணாமலையின் கட்டுப்பாட்டில் இல்லாததையே காட்டுகிறது. இவை எல்லாம் அண்ணாமலை சொல்லி நடக்கிறதா இல்லையா என்பதை அண்ணாமலை ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுப்படுத்த வேண்டும். என தெரிவித்து இருந்தார்.
<
முன்னாள் அமைச்சர் திரு ஜெயக்குமார் அவர்கள் எங்கள் பாஜக கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாங்களும் பேசுவோம்.
— Amar Prasad Reddy (@amarprasadreddy)p>
எச்சரிக்கை விடுத்த அமர் பிரசாத்
இதற்கு பதில் அளித்த அண்ணாமலையின் ஆதரவாளரும், பாஜக விளையாட்டு பிரிவை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி டுவிட்டர் பதிவில்,, முன்னாள் அமைச்சர் திரு ஜெயக்குமார் அவர்கள் எங்கள் பாஜக கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாங்களும் பேசுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்