சொல்லாமல் சொல்லும் அமித்ஷா.. தமிழகத்தில் பாஜக வளர்கிறது.. அண்ணாமலையை ஆஹா ஓஹோன்னு புகழும் ஜெ. நிழல்.!

By vinoth kumar  |  First Published May 1, 2023, 6:38 AM IST

பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடும் என்ற நிலை வரத்தான் போகிறது. அப்படி வரும் போது பலர் அதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்பதே உண்மை. நடக்கும் சூழ்நிலைகள் அதற்கு அச்சாரமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன.


பாஜக ஆளுமை மிக்க கட்சி என்பதை ஒரு பக்கம் பிரதமர், மறுபக்கம் அமித்ஷா என உலக அரங்கையும், இந்திய அரசியலையும் திகைத்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என  ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் புகழாரம் சூட்டியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தமிழகத்தில் அழகாகவும், ஆழமாகவும் வேரூன்றிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. கட்சிக்காக உழைத்தவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. கட்சியை நம்பி வருபவர்களையும் பாதுகாப்பாய் அரவணைத்துக் கொள்கிறது. கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உயர் பதவி தந்து உழைக்கும் தொண்டர்களுக்கு ஒரு ஒளிமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது. 

Latest Videos

இதையும் படிங்க;- OPS, EPS இருவரையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன்! கேக்கும் போதே ஆச்சரியமாக இருக்கா? ட்விஸ்ட் வைத்த பூங்குன்றன்.!

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர வாய்ப்பில்லை என்று பலர் சொல்லிக் கொண்டிருப்பதால் என்னவோ மாற்றுக் கட்சியில் வளர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடும் என்ற நிலை வரத்தான் போகிறது. அப்படி வரும் போது பலர் அதில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்பதே உண்மை. நடக்கும் சூழ்நிலைகள் அதற்கு அச்சாரமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சி, ஆளுமை மிக்க கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர்; மறுபக்கம் அமித்ஷா என உலக அரங்கையும், இந்திய அரசியலையும் திகைத்து பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன அரசியல் சாணக்கியர் நான்தான் என்பதை அமித்ஷா அவர்கள் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தங்களது கட்சியின் மாநில தலைவர் மீது ஒரு விமர்சனம் வரும்போது அதை தவிடு பொடியாக்கும் விதத்தில் மாற்று கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது மாநில தலைவரையும் உடன் வைத்து ஆளுமையை  மக்களுக்கு உணர்த்தி இருக்கிறார். 

இதையும் படிங்க;- அரசியலில் அண்ணாமலை வளர்ந்து கொண்டிருக்கிறார்.. அதுக்கு இதுவே சாட்சி.. ஜெ. உதவியாளர்..!

அதன் மூலம் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் எங்களுக்கு உயர்ந்தவர் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த செயல் ஒவ்வொரு தொண்டனையும் உற்சாகம் கொள்ளச் செய்திருக்கும். தொண்டர்களுக்கான மரியாதையை மாற்றுக் கட்சியினரிடம் உயர்த்தி இருக்கும். தமிழகத்தில் ஒரு நம்பிக்கையான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடிகிறது. தமிழகத் தலைவர் அண்ணாமலையும் தனக்கென ரசிகர் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

நான் சொல்வதை என் தலைமை கேட்கும் என்ற நிலை அவருக்கு ரசிகர் கூட்டத்தை மேலும் அதிகப்படுத்தும்..!  தொண்டர்களுடைய இதயத்தில் பாதுகாப்பான இயக்கம் என்ற நம்பிக்கையை விதைக்கத் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி படுவேகமாக வளரும் என்றே நான் நினைக்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரில் பாரதிய ஜனதா கட்சி எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? என்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களே இதற்கு சாட்சி என பூங்குன்றன் கூறியுள்ளார். 

click me!